பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148


227 பக்கங்கள் கொண்ட இந்நூலில், எண்கள் எல்லாம் தமிழ் எண்களாகவே குறிக்கப்பட்டுள்ளன. நூல் அச்சான காலம் த அா ச0ரு எனத் தமிழ் எண்ணுல் தெரிவிக்கப்பட்டிருப்பதை மேலே காண லாம். இது, இந்திய-அரபு எண்ணில் 1845 என்று பொருள்படும். 1845-ஆம் ஆண்டு அச்சான இந் நூலின் ஆசிரியர் பெயர் வெளிப்படையாக அறிவிக் கப்படாவிடினும், இலத்தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதியின் ஆசிரியர்களாகிய முசே (Mousset), துய்புயி (Duipuis) என்னும் துறவியர் இருவருமே இந்நூலின் ஆசிரியர்களுமாவர் என உய்த்துணர வேண்டியுள்ளது.

இலத்தின் - பிரெஞ்சு - தமிழ் அ. க ரா தி 1846-ஆம் ஆண்டு புதுவை மாதாகோயில் அச்ச கத்தில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. அதற்கும் ஓராண்டுக்கு முன்பு 1845-இல் இந்த இலத்தீன் இலக்கண நூற் சுருக்கம் அதே அச்சகத்தில் பதிப் பிக்கப்பெற்றுள்ளது. இலத்தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதி நூலிலும் ஆசிரியர் பெயர் அறிவிக்கப்பட வில்லே, துறவியர் இருவர் தொகுத்தது என்னும் பொதுக்குறிப்பே காணப்படுகிறது. இந்த இலத் தீன் இலக்கணநூற் சுருக்கத்திலும் ஆசிரியர் பெயர் அறிவிக்கப்படவிலலை. எனவே, மே ற் கூ றி ய காரணங்களால், இலத்தீன் - பிரெஞ்சு - த மி ழ் அகராதி தொகுத்த துறவியர் இருவருமே, இந்த இலத்தீன் இலக்கண நூற் சுருக்கமும் எழுதியிருக் கக்கூடும் - என்பது புலகுைம். முச்ே, துப்புப் என்னும் இருவருமே அவர்கள் என்னும் செய்தி