பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157


மொழியியல், மொழி பெயர்க்கும் வகை என நூலில் மூன்று வகுப்புக்கள் (பெரும் பிரிவுகள்) உள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் பல உட்பிரிவுகளும், சில உட்பிரிவுகளுக்குள் உட்பிரிவுகளும் இரு ப் ப ைத அட்டவணையால் அறியலாம். தமிழர்கள் இலத்தீன் கற்றுக்கொள்ளத் துணைபுரியும் இந்நூல் இப்போது கிடைப்பதரிது. இதனை மீண்டும் ப தி ப் பி த் த ல் பயனுள்ள செயலாகும்.

O

இலத்தின் இலக்கணம்

முற்கூறிய “இலத்தின் இலக்கணநூற் சுருக்கம்’ என்னும் பெயருடைய நூலேயன்றி, இலத்தீன் இலக்கணம் என்னும் பெயரிலும் ஒரு தனி நூல் அச்சிடப்பட்டிருந்தது. ‘இலத்தீன் இலக்கண நூற் சுருக்கம்’ என்னும் நூலின் பாயிரத்தின் இடையே யுள்ள, ‘..தமிழிலே முன்னிருந்த இலத்தீனிலக்கண நூற் போதாமையா யிருந்ததைப்பற்றி யிதை யேற் படுத்தத் துணிந்தோம்.” என்னும் பகுதி முன்னரே ( பக்கம் - 152 ) எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதல்ை வேறு நூல் இருந்தமை தெளிவாகிறது. அந்த வேறு நூலாக “இலத்தீன் இலக்கணம்’ என் னும் பெயருடைய நூலேக் குறிப்பிடலாம்.

‘இலத்தீன் இலக்கணம் என்னும் நூலும் தமிழின் வாயிலாக இலத்தீன் க ற் று க் .ெ கா ஸ் ள உதவும் துணை நூலே. புதுவை மாதாகோயில் அச்சகத்தில் வெளியான பூமி சாஸ்திர நூலாதாரம்'