பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158


என்னும் நூலின் முகப்பிலுள்ள விள ம் பர ப் பட்டியில், .

இலத்தி னிலக்கணம்: விலை ரூ. 0-12-0

என, அதாவது பன்னிரண்டு அணு (முக்கால் ரூபாயி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலத்தின் இலக் கண நூற் சுருக்கம்’ என்னும் நூலின் விலையோ ரூ. 1 (அதாவது ஒரு ரூபாயி) ஆகும். இதனே, இலத்தின் இலக்கண நூற் சுருக்கம்’ என்னும் நூலின் பாயிரத்தின் அடியில் உள்ள குறிப்புரைப் பகுதியாலும் உணரலாம். அது வருமாறு:

‘இவ்விலக்கண நூற் பிரதிகள் கொஞ்சமாத்திரஞ் செல வாகு மென்பதிேைல இதின் விலை இரண்டு ரூபாயாக நியமித் தாலுஞ் செய்யப்பட்ட செலவு பரிகாரமாக மாட்டாதாயினும், பொது நன்மையாகத் தக்க விந்தப் படிப்புச் சகலர்க்கு மதிக வெளிதாகும் பொருட்டு ஒரு ரூபாய் மாத்திர முபகாரமாக விதிக்கப்பட்டது.’ -

எனவே, ஒரு ரூபாய் விலையுள்ள ‘இலத்தீன் இலக்கண நூற் சுருக்கம் எ ன் னு ம் நூலும், முக்கால் ரூபாய் (பன்னிரண்டு அணு) விலையுள்ள ‘இலத்தின் இலக்கணம்’ என்னும் நூலும் வெவ்வே ருனவை என்பது புலப்படும். இவ்வாருக, தமிழ் அறிந்தவர்கள் இ ல த் தீ ன் கற்றுக்கொள்வதற்குத் தமிழில் இன்னும் சில துணை நூற்கள் (Guides) இருந்திருக்கலாம். அவை நமக்குக் கிடைக்கவில்லை.