பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வேறு பாலங்கள்

இதுகாறும் த மி ழ் - இ ல த் தி ன் பாலமாக உள்ள நூற்கள் சிலவற்றைப் ப ற் றி ஒரளவு விரிவாகப் பார்த்தோம். இந்நூற்களை யான் பெற முடிந்ததால் இவை குறித்துப் போதிய செய்திகள் தரமுடிந்தது. இவையேயன்றி, தமிழ்-இலத்தீன் பாலமாக இன்னும் பல்வேறு நூற்கள் உள்ளன. அவற்றுள் சில அச்சாகவில்லை; அச்சானவையும் கிடைக்கவில்லை. எனவே, அவை குறித்து ஒரளவு குறிப்புச் சுருக்கமே எழுதமுடிகிறது. இனி அவை வருமாறு:

இலத்தீன் பெரிபுளுஸ்

‘பெரிபுளுஸ் என்பது கிரேக்கச் சொல். கடலில் பயணம் போகவும் வரவும் துணை செய்யத்தக்க அடையாளங்களைக் குறிக்கும் கையேடு பெரிபுளுஸ்” எனக் கி ரே க் க மொ ழி யி ல் பெயர் சுட்டப் பட்டுள்ளது. ஊர் பேர் தெரிவித்துக்கொள்ளாத ஐரோப்பியர் ஒருவர் தென்னிந்தியாவிற்குப் பயணம் செய்து தாம் நேரில் கண்டவற்றை உரோம நாடு சென்று வெளியிட்டார். இவர் எழுதிய நூல், ‘பெரிபுளுஸ் ஆஃப் தி எரித்திரியன் சீ (Periplus of the Erythrean Sea) arori'l Qullui alpistill 106,031. எரித்திரியன் சீ (Erythrean Sea) என்பது செங்கடல். செங்கடல் வழியாகச் சென்று வந்த பயணக் குறிப்புக்களைப் பற்றிய நூலாதலின், இவ்வாறு பெயர் வழங்கப்பட்டது போலும் இது, இப்பகுதி யைப் பற்றி கேரில் கண்டு எழுதிய முதல் நூல்