பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163


ஆர். பி. குரி பாதிரியார் (R. P. Gury) ஆவார். பெஸ்கி, முசே, துய்புயி ஆகிய துறவியர்களைப் போலவே துறவி குரி அவர்களும் தமிழ்-இலத்தின் அகராதியில் கருத்து செலுத்தியிருப்பது குறிப்பிடத் தக்கது. குரியவர்களின் தமிழ்-இலத்தீன் அகராதி யைப் பற்றித் தமிழ்க் கலக் களஞ்சியம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளது:

  • “பெஸ்கி, ரொட்லர், வின் ஸ்லோ என்ற மூவர் இயற்றியவைகளைப் பயன்படுத்தி ஆர். பி. குரி என்ற பாதிரியார் ஒரு தமிழ் - இலத்தீன் அகராதி இயற்றி நாகப்பட்டணத்திலிருந்து 1867-இல் .ெ வ ளி யி ட் டனர்.”

இது குறித்துச் சிறிது ஆராய்வாம்: பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் 1742-ஆம் ஆண்டளவில் தமிழ் - இலத்தீன் அகராதியும், இலத்தீன் - தமிழ் அகராதியும், - 1744-ஆம் ஆண்டளவில் தமிழ் - பிரெஞ்சு அகராதியும், போர்த்துகீசியம்-இலத்தீன்தமிழ் அகராதியும், அடுத்துத் தமிழ் - ஆங் கி ல அகராதி யொன்றும் தொகுத்தார். ரொட்லர் (Dr. J. P. Rottler) 1830--21b -2,6 irl_orelo) 5Lyஆங்கில அ. க ரா தி தொகுத்தார். இது நான்கு தொகுதிகளுடையது. நான்கு தொகு தி க ளு ம் முறையே 1834, 1837, 1839, 1841-ஆம் ஆண்டு களில் சென்னையில் பதிப்பிக்கப்பட்டன. அடுத்து வின் சுலோ (Rev. M. Winslow) எ ன் பவரி ன் ஆங்கிலம்-தமிழ் அகராதி 1842-ஆம் ஆண்டிலும்,

  • கலைக்களஞ்சியம் - முதல் தொகுதி - பக்கம் 17.