பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164


தமிழ்-ஆங்கில அகராதி 1862-ஆம் ஆண்டிலும் அச்சிடப்பட்டன. வின்சுலோவின் அகராதிகள் அச்சுக்கு வந்தது 1842, 1862-ஆம் ஆண்டுகளில் என்றாலும், அவை இன்னும் சில ஆண்டுகட்கு முன்பே வின்சுலோவால் தொகுக்கப்பட்டுவிட்டிருக்க வேண்டும். அவரது ஆங்கிலம் - தமிழ் அக ரா தி 1842-இல் அச்சிடப்பட்டிருந்தும், அதற்கும் இருபது ஆண்டுகள் கழித்தே 1862-இல் அவரது த மி ம் - ஆங்கில அகராதி அச்சிடப்பட்டிருக்கிறது. ஆனல் இரண்டு அகராதிகளும் ஏறக்குறைய அடுத்தடுத்தே தொகுக்கப்பட்டிக்க வேண்டும். எனவே, அவை யி ர ண் டு ம் 1840-ஆம் ஆண்டுக்குள்ளேயாவது தொகுக்கப்பட்டிருக்கலாம்.

இந்த நிலையில், பெஸ்கி, ரொட்லர், வின்சுலோ ஆகிய மூவர் அ. க ரா தி க ளே அடிப்படையாகக் கொண்டு குரி பாதிரியார் தமிழ்-இலத்தீன் அகராதி இயற்றியதாகக் கலைக்களஞ்சியம் கூ று கி ற து. அங்ஙன மெனில், குரியவர்கள் தமது அகராதியை 1840-ஆம் ஆண்டுக்குமேல் தொகுத்திருக்கலாம். இந்நூல் 1867-இல் நாகப்பட்டணத்தில் அச்சிடப் பட்டிருப்பினும், 1855-ஆம் ஆண்டுக்கு முன்பே தொகுக்கப்பட்டுவிட்டிருக்கவேண்டும். புதுச்சேரி மாதாகோயில் அச்சகத்தில் 1855-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்ற தமிழ் - பிரெஞ்சு அகராதியின் முன்னுரையில், அதன் ஆசிரியர்களாகிய முசே, துய்புய் ஆகிய துறவியர் இருவரும், குரி பாதிரியார் அவர்களின் தமிழ் - இலத்தீன் அகரா தி யை ப் பற்றிப் பின்வருமாறு குறிப்பீட்டுள்ளனர்: