பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலத்தீன் - தமிழ் இயற்கை ஒற்றுமைகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகட்குள்ளே நெருங்கிய ஒற்றுமை இருப்பது இயல்பு. வெவ்வேறு குடும்ப மொழிகட்குள்ளே அத்தகைய ஒற்றுமை யைக் காணுதல் அரிது. ஆனல், மொழிகள் என்ற முறையில், வெவ்வேறு குடும்ப மொழிகட்குள்ளும் தற்செயலாகச் சில ஒற்றுமைகள் அமைந்து கிடப் பதும் உண்டு,

இலத்தீன், தமிழ் ஆகிய மொழிகட்குள்ளே நெருங்கிய ஒற்றுமை யிருப்பதற்கு வழியில்லே. இலத்தீனே, இந்தோ - ஐரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி; தமிழோ, திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி; எனவே, இவ் வி ர ண் டி ற்கு ம் இடையே எங்ஙனம் ஒற்றுமை யிருக்க முடியும்?

தமிழ் மொழியைத் தாய்மையாக-தலைமையாகக் கொண்டுள்ள தென்னிந்திய மொழிகளோடு இலத்தி அனுக்குத் தொடர்பில்லே யெனினும், சம்சுகிருதத் தைத் தாய்மையாக - தலைமையாகக் கொண்டுள்ள வட இந்திய மொழி க ளோடு இலத்தீனுக்குத் தொடர்பு கூறமுடியும். இலத்தினும் சம்சுகிருதமும் இந்தோ - ஐரோப்பியக் குடும்பம் என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொ ழி க ள் என்னும் செய்தியை இலத்தின் மொழி’ என்னும் தனித் தலைப்பின் இறுதியில் தரப்பட்டுள்ள மொழிமரபு