பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175


கட்குள்ளும் இயற்கையாகவே சில ஒற்றுமைகள் அமைந்திருப்பது வியப்பாய்த்தான் இருக்கிறது. இரண்டும் மிகப் பழைய உயர்தனிச் செம்மொழிக ளானதால், இயற்கையாகவே ஒருசில ஒற்றுமை களைப் பெற்றிருக்கின்றன போலும் ! அண்ணன் - தம்பியரிடையே உள்ள உருவ ஒற்றுமையினும், வெவ்வேறு ஊரினர் இருவரிடையே இயற்கையாய் அமைந்துள்ள உருவ ஒற்றுமையைக் கண்டு வியப் பதிலேதான் சுவை மிகுதி. இங்கேயும் அதுபோலத் தான்! சுவைப்பதற்கு இன்பமான அந்த இயற்கை யொற்றுமைகள் சில இனி வருமாறு:

சொற்றாெடர் (வாக்கியம்) அமைப்பு ‘முருகன் எனக்கு ஒரு சுவடி கொடுத்தான்’ என்பது ஒரு சொற்றாெடர் - அதாவது, வாக்கியம். இத்தொடரில், முருகன்’ என்னும் எ ழு வா யி முதலாவதாகவும், “எனக்கு’ என்னும் நான்காம் வேற்றுமை விரி இரண்டாவதாகவும், ஒரு சுவடி” என்னும் இரண்டாம் வேற்றுமைச் .ெ ச ய ப் ப டு பொருள் மூன்றாவதாகவும், கொடுத்தான்’ என்னும் பயனிலை இறுதியாகவும் இருக்கக் காண்கிருேம். தமிழில் இந்த வரிசையில் சொற்களே அடுக்கிச் சொற்றாெடர் அமைப்பதே மரபு.

யான் இளமையில் ஆங்கிலம் கற்கத் தொடங் கியபோது, இதே கருத்து, முருகன் கொடுத்தான் எனக்கு ஒரு சுவடி - அதாவது . Murukan gave me a book’ என்பதாக ஆங்கிலச் சொற்றெடரில் அமைக்கப்படும் சொல் வரிசை முறையறிந்து வியப்