பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189


இலத்தீனில் ‘V’ என்பது ஐந்தையும்,'1’ என்பது ஒன்றையும் குறிக்கும்; ‘V’ என்பதற்கு முன்னல் ‘1’ என்பதைப்போட்டு IV என எழுதினல், ஐந்தில் ஒன்று கழிய, “நான்கு (IV=4) எனப் பொருள்படும். இதுபோலவே, பத்தைக் குறிக்கும் X என்பதற்கு முன்னல் ‘1’ இதைப்போட்டு IX என எழுதினால், பத்தில் ஒன்று கழிய, ‘ஒன்பது (IX=9) எனப் பொருள்படும். மற்றும், ‘C’ என்பது நூறையும் ‘X’ என்பது பத்தையும் குறிக்கும்; ‘C’ என்பதற்கு முன்னுல் X என்பதைப்போட்டு “XC” என எழு தின், நூறில் பத்து க முறி ய, ‘தொண்ணுரறு’ (XC=90) எனப் பொருள்படும்.

இவ்வாருக, எழுதும் வரி வடிவத்தில் பெரிய எண்ணுக்கு முன் சிறிய எண்ணேப்போட்டு எழுதிக் கழித்துக் குறைப்பது ஒருபுற மிருக்க, பேசும் பேச்சொலி வடிவத்திலும் பெரிய எண்ணுக்குமுன் சிறிய எண்ணேக் கூறிக் கழித்துக் குறைக்கும் முறை இலத்தீனில் உள்ளது. 18,19-28,29-38,39 என்பன போல 8, 9 என்னும் எ ண் க ளி ல் முடியும் கூட்டெண்களைக் குறிக்கும் பெயர்களில் இம்முறை யைக் காணலாம். எடுத்துக்காட்டு:

Viginti’ என்றால் இருபது என்றும், un’ என்றால் ஒன்று என்றும், “de என்றால் அதி லிருந்து நீங்குவது (from) என்றும் பொருளாம். 6I 6JTGau, un + de + viginti = undeviginti GT6r (mai), இருபதிலிருந்து ஒன்று நீங்கியது - அதாவது, பத்தொன்பது (20-1=19) என்று பொருளாம்.