பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192


‘ ‘ஒன்பாைெடு பத்து நூறு மொன்றின்

முன்னதி னேனேய முரணி யொவ்வொடு

தகர கிறீஇப் பஃதகற்றி னவ்வை

நிரலே ணளவாத் திரிப்பது நெறியே’. என்னும் நன்னூல் நூற்பாவாலும் அறியலாம். தலைமைத் தமிழிலக்கணப் பேராசிரியர்கள் இரு வரும் எழுதியிருக்கிறார்கள் என்பதற்காக, இவர்தம் கருத்தை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள வியலுமா? இந்தக் கருத்தைத் தேவநேயப் பாவாணரும் ஒன்பான் ஒகரமிசைத் த க ர ம் ஒற்றும் என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு எழுதியுள்ள குறிப்புரையில் பின்வருமாறு மறுத் துள்ளார்:.

‘இந்நூற்பா ஒன்பது-பஃது=தொண்ணுாறு என முடிக்கிறது. இம் மு. டி பு எவ்வகையிலும் பொருந்தாத தொன்றாம். ஒன்பது எ ன் னு ம் எண்ணுக்குப் பழம் பெயர் தொண்டு என்பது, ‘தொண்டு தலையிட்ட” (தொல். 1858) எ ன் று ஆசிரியரும், ‘தொண்டுபடு திவவு’ (மலைபடு. 21) என்று பெருங் குன்றுார்ப் பெருங்கெளசிகனரும் கூறுதல் காண்க. தொண்டு என்னும் சொல் தொல் காப்பியர் காலத்திலேயே வழக்கற்றுப்போய்விட் டது. அவர் காலத்திற்குமுன் தொண்டு தொண்பது தொண்ணுாறு தொள்ளாயிரம் என்பன முறையே 9, 90, 900, 9000 என்னும் எண்களைக் குறிக்கும்

1. நன்னூல் - எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் - 44.

2 தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - நச்சிஞர்க்கினியம் . கழகப்பதிப்பு -

பாவாணரின் அடிக்குறிப்பு - குற்றியலுகர்ப் புணரியல் - 40.