பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197


என்னும் புணர்ச்சியைப் பெருக்கல் கணக்காக எடுத்துக் கொள்ளாமல், கழித்தல் கணக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது, 10x1= 10 எனக் கொள்ளாமல், 10-1=9 எனக் கொள்ளவேண்டும்.

எனினும், இரண்டு-பத்து=இருபது (20), மூன்று-பத்து=முப்பது (30) எனப் பெருக்கலாகப் புணர்வதுபோல், ஒன்று-பத்து என்பதும் ஒருபது (10) எனப் பெருக்கலாகப் புணர்வதே இயற்கை; ஒன்பது (9) எனக் கழித்தலாகப் புணர்வது இயற்கைக்கு முரண் என ஒரேயடியாக அடித்துப் பேசிவிடலாம். மற்றும், ஒன்பது என்பதை இரண்டு சொற்களின் புணர்ச்சியாகக் கொள்ளாமல், ஒன்று, இரண்டு முதலியன போல ஒரே சொல்லாகவே கொள்ளலாம் என்றும் சிலர் கூறிவிடலாம். அங்ஙன மெனில், இதற்குரிய தீர்வு யாது?

இருபது, முப்பது முதலிய பெயர்களின் இறுதி யில் உள்ள பது’ என்பதைப் பத்து’ என்னும் சொல்லின் திரிபாகக் கொள்வதுபோலவே, ஒன்பது என்னும் பெயரின் இறுதியில் உள்ள ‘பது’ என் பதையும் பத்து என்னும் சொல்லின் திரிபாகக் கொள்வதே பொருத்த முடைத்து. எனவே, ஒன்பது என்பதின் இறுதியிலுள்ள பது’ என்பது பத்து’ என்பதின் திரிபு எனக் கொள்ளும்போது, அதற்கு முன்னலுள்ள ஒன்’ என்பது ஒன்று என்னும் சொல்லின் திரிபு எனக் கொள்ளுதலும் பொருத்த