பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199


ஒன்று முதல் பத்து வரையுமான எண்ணுப் பெயர்களுள் ஒன்று, ஆறு, எட்டு, தொண்டு என்னும் நான்கு மட்டும் பல பொருள் தருபவை. அதாவது, ஒன்று என்னும் சொல் 1 என்னும் எண்ணுப்பொருளைத் தருவதல்லாமல், ஒன்றுதல்பொருந்துதல் என்னும் பொருளையும் தருகிறது, ஆறு என்னும் சொல் 6 என்னும் எண்ணுப் பொருளைத் தருவதன்றி, ஒடும் ஆறு (நதி), வழி, ஆறுதல் முதலிய பொருள்களையும் தருகிறது. எட்டு என்னும் சொல் 8 என்னும் எண்ணுப் பொருளைத் தருவதன்றி, எட்டுதல் என்னும் பொருளேயும் தருகிறது. தொண்டு என்னும் சொல் 9 என்னும் எண்ணுப் பொருளைத் தருவதன்றி, பணி, பணி விடை, அடிமைத்தன்மை, அடிமையாள், கடவுள் வழிபாடு, மாட்டுத் தொழுவம், தேங்காய்-பலா முதலியவற்றின் மேல் பகுதி, ஒருவகைப் பூண்டு. பழமை, முதுமை, ஒடுக்கவழி, மாட்டின் கழுத்துக் கட்டை, ஒழுக்கம் கெட்டவன் அல்லது-கெட்டவள் முதலிய பல்வேறு பொருள்களையும் தருகிறது. இவ்வாருகத் தொண்டு என்னும் சொல் பல பொருள்கட்கு இடந்தந்து குழப்பம் விளைவிப்ப தாலும், ஒழுக்கம் கெட்டவர்’ என்ற இழிந்த பொருளும் உடைத்தாயிருப்பதாலும் பையப் பைய மக்கள் ஆட்சியிலிருந்து நழுவிவிட, அதனிடத்தை ஒன்பது என்னும் சொல் உறுதியாகப் பற்றிக் கொண்டது. ஒன்று, ஆறு, எட்டு என்னும் சொற் களும் வேறு பொருள்கள் உடையன எனினும், அவை தொண்டு என்னும் சொல் அளவிற்குக் குழப்பமும் இழிபொருளும் கொண்டிருக்கவில்லே