பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205


யான புணர்ச்சி விதியுமாகும். இது தெரியாமல் இலக்கண ஆசிரியர்கள் எவ்வளவோ இடர்ப்பா டுற்று எதையாவது சொல்லி வைக்கவேண்டுமே யென்று என்னென்னவோ கூறிச் சென்றுள்ளனர். இனி, எளிய - இயற்கையான-உண்மையானதெளிவான அந்தப் புணர்ச்சி விதி வருமாறு:

தொள்+நூறு=தொண்ணுறு. தொள்-ஆயிரம்=தொள்ளாயிரம்,

இ த னி னு ம் இயற்கையான - உண்மையான புணர்ச்சி விதி எதுவும் இருக்க முடியாது. மொழி நூல் அறிவு மிக்க எவரும் இந்தப் புணர்ச்சி விதி பொருந்தாதென்று புறக்கணிக்கவே முடியாது. புணர்ச்சி விதி சரிதான் - ஆனல் பொருள் என்ன? தொள் நூறு என்றால் குறைவு பெற்ற நூறு'; தொள் ஆயிரம் என்றால் குறைவு பெற்ற ஆயிரம்’. தொள் என்றால், தொளைத்து எடுக்கப்பட்டது - குறைக்கப்பட்டது என்று பொருளாம். 10 என்பது, பத்து ஒன்று .ெ கா ன் ட து; அதில் ஒரு பகுதி குறைந்தால் ஒன்பது (10-1=9) ஆகும். நூறு (100) என்பது, பத்துப் பத்து கொண்டது; அதில் ஒரு பகுதி கு ைற ங் த ா ல் (தொள்--நூறு) தொண்ணுாறு (100-10=90) ஆகும். ஆயிரம் (1000) என்பது, பத்து நூறு கொண்டது; அதில் ஒரு பகுதி குறைந்தால் (தொள் + ஆயிரம்) தொள்ளாயிரம் (1000-100=900) ஆகும். ஒரு பெரிய முழு எண்ணிற்குச் சிறிது குறைவதைத் தனிப்பெயராகச் .ெ சா ல் லா ம ல் அந்த முழு எண்ணின் பெயரைக் கொண்டே குறிப்பிடுவது