பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234


  • utrum venerit nescio’

“வந்தானே அ றி யே ன் - என்பது இதன் பொருள். venerit எ ன் ரு ல் ‘வந்தான்’, utrum 6T 6ir (f 60 ‘g’ (606)), utrum venerit at 67 (7 60 “வந்தானே’, nescio என்றால் ‘அறியேன்” - என்பது பொருள். இங்கே utrum என்பது .ெ சா ல் லு க் கு முன்னல் த னி ச் சொல் லா க நின்று வினப் பொருளைத் தருவதைக் காணலாம் அடுத்து,ஐந்தனுள் இறுதியில் கூறப்பட்டுள்ள ne’ என்பது, தந்தாயா - தந்தாயோ எனத் தமிழில் உள்ளாங்கு, சொற்களுக்குப் பின்னல் சொல்லோடு சொல்லாய் இணைந்து கின்று வினப்பொருளைத் தருவது இவண் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். எடுத்துக்காட்டு:

1. Tu mihi pecuniam dedistine? நீ எனக்குப் பணம் தந்தாயா? 2. Tu mihi decemne nummos dedisti?

நீ எனக்குப் பத்துப் பணமா தந்தாய்? 3. Tu mihine pecuniam dedisti? நீ எனக்கா பணம் தந்தாய்? 4. Tune mihi pecuniam dedisti?

நீயா எனக்குப் பணம் தந்தாய்?

மேலுள்ள ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு வகைச் சொல்லுக்கும் பின்னே ‘ne’ எ ன் ப து சொல்லோடு சொல்லாய் இணைந்து நி ன் று வினப் பொருள் தந்து தமிழோடு ஒத்திருப்பதைக் கண்டு மகிழலாம். ஆங்கிலத்தில் இத்தகைய அமைப்பினைக் காண முடியாதன் ருே?