பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுக்குப் பல மொழிகளோடு பாலங்கள்

இந்திய மொழிகள் சிலவற்றாேடும் ஐரோப்பிய மொழிகள் சிலவற்றாேடும் தமிழுக்குப் பாலங்கள் பல அமைத்துள்ளனர் அறிஞர் பலர். இந்தப் பாலங் களே மூன்று வகையாகப் பி ரி க்க லாம். தமிழ் நூற்களைப் பிற மொ ழி க ளி லும் பிற மொழி நூற்களைத் தமிழிலும் மொழிபெயர்த்தல் ஒருவகை; தமிழிலக்கணத்தைப் பிற மொ ழி க ளி லு ம் பிற மொ ழி யி ல க் க ண ங் க ளே த் தமிழிலும் இயற்றுதல் இன்னொரு வகை, தமிழ்ச் சொற்கட்குப் பிற மொழிகளில் பொருள் கூறியும் பிற மொழிச் சொற்கட்குத் தமிழில் பொருள் கூறியும் அகராதி ஆக்குதல் மற்று மொருவகை. இம்மூன்று வகை களில் உலக மொழிகள் பலவற்றாேடு தமிழுக்குப் பாலங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக மொழி பெயர்ப்புப் பாலங்களே எடுத்துக் கொள்ளின் அவற்றிற்கு அளவேயில்லே. தமிழிலுள்ள திருக்குறள் நூல் நூற்றுக்கு மேற் பட்ட உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டிருப்பது உ ல க றி ங் த உண்மை. ம ற் று ம், நாலடியார், சிலப்பதிகாரம், திருவாசகம், கம்பராமாயணம், புறப்பொருள் வெண்பாமாலே, தாயுமானவர் பாடல், பஞ்சதந்திரக்கதை, கங்தபுராணம், திருவிளையாடற் புராணம், திருப்பாவை, ஆத்திகுடி கொன்றை