பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்-இலத்தின் பாலம்

ஆங்கில மொழியும் பிரெஞ்சு மொழியும் புதுச் சேரி-காரைக்கால் உட்பட்ட தமிழகத்தை ஆண்ட தால் இம்மொழிகளோடு தமிழுக்குப் பாலங்கள் ஏற்பட்டதில் அவ்வளவாக வியப்பொன்றுமில்லை. தமிழகத்தோடு எந்தத் தொடர்பும் பெற்றிராத இலத்தீன் மொழியோடு தமிழுக்குப் பாலம் ஏற்பட் டதுதான் நயத்தற்கும் வியத்தற்கும் உரியது. வட இந்திய மொழிகளின் முதல் மொழியும் இந்தி யாவில் சமய-சடங்குத் துறைகளில் ஆட்சி செலுத் தும் மொழியுமாகிய வடமொழி எனப்படும் சம்சு கிருதம்போல், ஐரோப்பாவில் பல மொழிகட்கு முதல் மொழியாகவும், சமயத்துறையில் ஆட்சி செலுத்தும் மொழியாகவும் திகழ்வது இலத்தின் மொழியாகும்.

பொதுவாக - மொழியினே ஒரு கருவிப்பாடம் (Tool Subject) என்று சொல்வது மரபு. எல்லாத் துறைகளையும்-கலேகளையும் மொழியின் வாயிலாகத் தானே அறிந்துகொள்ள முடியும் ? மொழி களுள்ளும், பலராலும் பின்பற்றப்படும் ஒரு மொழி யினை, கருத்துக்கள் வரவும் போகவும் உதவும் ஒரு பெரு வாயிலாகக் கூறலாம். இந்த அடிப்படையில் நோக்குங்கால் இலத்தின் மொழியின் இன்றியமை யாமை நன்கு புலப்படும். இம்மொழி ஐரோப்பிய மொழிகள் பலவற்றின் முதல் மொழியாக இருப்பத