பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


போல இந்தோ-ஐரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந் தது என்பதை, இந்நூலில் வேருேர் இடத்திலுள்ள இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்ப மரபுவழி அட்டவணையால் உணரலாம்; இங்கிலையில், சம்சு கிருதத்திலும் அதன் வழி மொழிகளிலும் உயிர் மெய்யெழுத்து உண்டென்றால், அது, தமிழ் மொழியைப் பின்பற்றி அமைக்கப்பட்டதாகத் தானே இருக்கவேண்டும்? எனவே, இந்திய மொழி கட்கெல்லாம் எழுத்து வளம் ஈந்த மொழி தமிழ் மொழியாகும்.

இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே அதாவது கி. மு. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அகத்தியம், தொல்காப்பியம் முதலிய பேரிலக்கண நூற்களைப் பெற்ற மொழி தமிழ் மொழி, பல துறை களேச் சார்ந்த பழைய கலே நூற்கள் பலவற்றை இழந்துவிட்டிருப்பினும், இற்றைக்கு இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன்பே, சங்க இலக்கியங்கள் எனப்படும் சிறந்த இலக்கிய நூற்கள் பலவற்றைப் பெற்றுள்ள மொழி தமிழ் மொழி; கடந்த இரண் டாயிரம் ஆண்டுகளாக - இற்றை நாள்வரை, நூற் ருண்டு - நூற்றாண்டுதோறும் தொடர்ந்து பல்வேறு இலக்கிய இலக்கணங்களையும் பல து ைற க் க லே நூற்களையும் பெற்றுத் திகழ்ந்துவரும் மொழி தமிழ் மொழி. சுருங்கச் சொல்லி விளங்கவைக்க வேண்டுமெனின், உலகப் பேரிலக்கியமாகத் திருக் குறளே வையகத்துக்குத் தந்து வான் புகழ் கொண்ட உயர்தனிச் செம்மொழி தமிழ் மொழியாகும்.