பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


இத்தாலி நாடு முழுதும் இலத்தின் மொழி ஆட்சி புரியத் தொடங்கியது. ரோம் அரசு வளர வளர இலத்தினும் வளங்கொழித்து வளர்ந்தது. ரோமப் பேரரசு ஐரோப்பாவில் மேன்மேலும் பல நாடுகளை வென்று அங்கெல்லாம் தன் ஆணையுடன் இலத்தீன் மொழியையும் பரப்பி நிலைபெறச் செய்தது. ஆங்கு வழங்கிய மொழிகளின் இடத்தை, நூல் வழக்கிலே யன்றிப் பேச்சு வழக்கிலும் இலத்தீன் பிடித்துக் கொண்டது. நாளடைவில் இம்மொழி சிதைந்து பல்வேறு மொழியுருவம் பெற்றது. இத்தாலியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகல், ருமேனியன் முதலிய மொழிகள் இலத்தீனின் சிதைவு மொழி களே. அதனுல் இம்மொழிகளே ரோமான்சு’ (Romance) அதாவது ரோமன் மொழிகள் எனல் மரபு. அமெரிக்கக் கண்டத்தில் பி .ெ ர ஞ் சு, ஸ்பானிஷ், போர்ச்சுகல் ஆகிய மொழிகள் வழங் கப்படும் ஆர்ஜென்டின, பிரேசில், கொலம்பியா, குவாட்டமாலா முதலிய இருபது நாடுகள் இலத் தீன் அமெரிக்கா’ என அழைக்கப்படுவது ஈண்டு ஒப்புநோக்கற்பாலது.

கி. மு. முதல் நூற்றாண்டில் மிகவும் செழிப்புற் றிருந்த இலத்தீனின் செல்வாக்கு, அகஸ்ட்டஸ்’ (Augustus) என்னும் ரோமவேந்தன் இறுதி யெய் தும்வரை - அதாவது கி. பி. 14 ஆம் ஆண்டுவரை கிலேத்திருந்தது. பின்னர் ரோமப் பேரரசு வீழ்ச்சி யடைந்ததும் இலத்தீனின் செல்வாக்கும் குறைய, அது பல்வேறு மொழிகளாகச் சிதைந்து மாறியது.