பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


தொடக்கத்தில் இலத்தீன் மொழியின் இலக்கிய வழக்கும் மக்களின் பேச்சு வழக்கும் ஒன்றாகவே இருந்தன. நாளடைவில் பேச்சு வழக்கில் மாறுதல் ஏற்பட்டதால், ரோமன் மொழி (Lingua Romana) என்னும் பெயரில் எளிய மக்கள் மொழி யொன்று உருவாயிற்று. இது வளர வளர, பழைய இலக்கிய இலத்தீன் மொழி, பேச்சு வழக்கிலிருக்கும் பெரு மையை யிழந்து ஏட்டளவில் கின்றுவிட்டது.

இப்பொழுது ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய ஐரோப்பிய மொழிகள் எழுதப்படும் A முதல் Z வரை யுள்ள இருபத்தாறு எழுத்துக்களையும் ரோமன் எழுத்துக்கள்’ (Roman Letters) எனல் மரபு. இந்த இருபத்தாறனுள்ளும் 1, U, W என் ஆணும் மூன்று எழுத்துக்களும் பண்டு இலத்தீன் மொழியில் இருக்கவில்லை; இப்பொழுதுங்கூட W என்னும் எழுத்து இலத்தீனில் இல்லை, இலத்தீன் நெடுங்கணக்கு (எழுத்துக்கள்), கி ரே க் க மொழி யைப் பின்பற்றி அமைக்கப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. கிரேக்கம் இலத்தீனினும் பழமை யானது.

இலத்தீன் மொழியானது, தமிழ், சம்சுகிருதம், கிரேக்கம் ஆகிய மொழிகளைப்போல் மிக மிகப் பழமையானது என்று சொல்லமுடியாதாயினும், வேறு எத்தனையோ உலக மொழிகளே நோக்க மிகப் பழமையானது என்று கூறமுடியும். கி. மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி கி. பி. இரண்டாம் நூற் ருண்டுவரை சிறந்த அறிஞர் பலரால் சிறப்பு