பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலுமான ஐந்நூ ருண்டு கால அளவில் சிறந்த படைப்புக்கள் பல வற்றைப் பெற்றுச் செழித்து வளர்ந்த இலத்தீன், பின்னர்-பின்னர், அரசியல் செல்வாக்கும் பேச்சு வழக்கும் இழந்தமையால் போதிய மேல்வளர்ச்சி யின்றி, கிறித்தவர்களின் சமயச் சடங்குமொழி என்ற அளவில் நின்றுவிட்டது. இருப்பினும், பழம் பெருஞ் சிறப்புமிக்க மொழியாதலின், ஐரோப்பியப் பள்ளிகளில் பரவலாகப் பலராலும் படிக்கப்பட்டு வந்தது; இ ன் றும் ஒரளவு படிக்கப்படுகிறது. எவர் படித்தாலும் படிக்காவிட்டாலும், கிறித்தவ சமயத் துறவியர்க்குப் பயிற்சிப் ப ள் வளி க ளி ல் இலத்தீன் மொழி பயிற்றப்படுகிறது. பேச்சு வழக் கற்று நூல் வழக்கோடிருக்கின்ற பழம் பெரு மொழி களின் பட்டியலில் தானும் ஒன்றாக இடம் பெற் றிருப்பதுதான் இன்றைய இலத்தீன் மொழியின் நிலைமையாகும். .

எடுத்துக்கொண்டுள்ள ஆராய்ச்சிக்கு, பின்னர் உதவுவதற்காக, இலத்தீன் மொழி சார்ந்துள்ள இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்ப மரவுவழிப் பட்டியல் இங்கே (பக்கம்: 36-37) தரப்பட்டுள்ளது.