பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் - இலத்தீன் பாலம் அமைத்தோர்

தமிழ் இலத் தி ன் பாலம் அமைத்தோருள் வீரமாமுனிவரின் வரலாறு விரிவாகத் தெரிகிறது. துய்புய், முசே என்பார் இருவரும் பிரான்சிலிருந்து வந்த துறவியர்கள்; இவர்கள் வரலாறும் ஓரளவு தெரிகிரிது. குரி துறவியார் பற்றியும், டாக்டர் கிரெளல், சீகன்பால்க் ஆகிய செர்மானியர் இருவர் பற்றியும், பின்னே அவர்தம் நூற்களைப்பற்றிக் கூறி யுள்ள பகுதியில் சில செய்திகள் காணலாம். தமிழ்இலத்தீன் பாலம் அமைத்தவர்களுள் மிகவும் தலே யாயவராய வீரமாமுனிவரின் வரலாறு குறித்தும், அடுத்து, துய்புயி, முசே ஆகியோர் வரலாறு குறித்தும் ஈண்டு ஒரளவு காண்பாம்.

வீரமா முனிவர்

வீரமாமுனிவரின் இயற்பெயர் ஜோசப் கான்ஸ் l_T G Giv QL16svS’ (Joseph Constance Beschi ) என்பதாகும். இது, ஆங்கில ஒலிப்பு முறையில் அழைக்கப்படும் பெயராகும். ஆனால், வீரமாமுனிவர் பிறந்த இத்தாலி நாட்டின் பண்டைய மொழியாகிய @60 # 36 fs Gaug gi Quur ‘Josepho Constantio Beschio என்று எழுதப்பட்டுள்ளது. இவர் இத்தாலி நாட்டில் காஸ் திகிலியோனே என்னும் ஊரில் கி. பி. 1680- ஆம் ஆண்டு பிறந்தார்; இளமையிலேயே பல