பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லெவியஸ் ஆக் த்ேராணிக்கு ய்ஸ் (Levies Andronicus, கி. மு. 384 கி. மு. 204) என்னும் பெரும் புலவர் காலத்திலிருந்து படிப்படியாகப் பெரு வளர்ச் சி பெ ற் று வந்த-இலத்தின் மொழி, அரசிய ல செல்வாக்கு இழந்ததால், கி. பி. ஐந்தாவது நூற் முண்டுக்குப் பின், பேச்சு வழக்கினின்றும் சிறிது சிறிதாக விலகித் தன் உயிர்த் தன்மையை இமுக்த லாயிற்று. ஆயினும், கிறித்துவர் கோயில்களிலும் திேத் துறையிலும் அதன் செல்வாக்குக் குறைய வில்லை. இலத்தின் மொழியின் பண்டைய சிறப்பு, அதனைப் பழங் காலத்து. மு ைற யி ல் இருந்தபடி யேனும் இருக்கச்செய்து அதன் அருமை பெருமை யினே விளங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த இலத்தின் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையே யுள்ள தொடர்புச் செய்திகளேத் தமிழ் மக்களுள் ஒரு சிலரே அறிவர். அவற்றைப் பற்றிப் பலரும் தெரிந்து கொள்ளும்வண்ணம் புலவர் திரு. சுந்தர சண்முகனர் தமிழ் இலத்தீன் பாலம் ” என்னும் பெயரிய இந்நூலே இயற்றி உதவியிருப்பது பெரிதும் பாராட்டற் குரியது.

நூலின் தொடக்கத்தில் மொழி ஒப்பியலைப் பற்றி ஆராய்ந்த ஆசிரியர், தொடர்ந்து, தமிழ் - இ ல த் தீ ன் மொழிகள் பற்றியும், தமிழ் இலத்தீன் பாலம் அமைத்த அறிஞர்கள் ப ற் றி யு ம், தமிழ் இலத்தின் பாலமாக உள்ள நூற்கள் ப ற் றி யு ம் விரிவாக ஆராய்ந்து விளக்கிக்கொண்டு செல்கிறார். ஆசிரியர் சுந்தர சண்முகனர் தந்துள்ள இலத்தீன் ஒலிப்பு முறை என்னும் பகுதி, இலத்தின் கற்க முயலும் தமிழர்க்குப் பெரும்பயன் அளிப்பதாகும். ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ள இலத்தீன் - தமிழ் இயற்கை ஒற்றுமைகள் அனைத்துமே படிப்பதற்கு மிகவும் சுவை பயப்பினும், அவற்றுள், எண்ணுப் பெயர் ஒற்றுமை’ என்னும் பகு தி யி ல் அவரது