பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


வித்திட்டார்; தமிழிலும் இலத்தீனிலும் பல நூற்கள் இயற்றினர். . l

முனிவர் தமிழ் மொழியில் தேம்பாவணி என் னும் பெருங்காவியம், திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரி அம்மாள் அம்மானே முதலிய செய்யுள் நூற் களும், தொன்னூல் விளக்கம் என்னும் சிறந்த இலக்கண நூலும், வேத விளக்கம், பேதக மறுத்தல், வேதியர் ஒழுக்கம், லுத்தேரினத்தார் இயல்பு, பரமார்த்தகுரு கதை முதலிய உரைாடை நூல்களும், சதுர் அகராதி என்னும் பெயரில் தமிழுக்குத் தமிழ் அகராதியொன்றும் இயற்றியருளினர். பண்டு தமிழ் அகராதித் துறை நூற்கள், இக்கால அகராதிகள் போல் இ ல் லா ம ல், நிகண்டு என்னும் பெயரில் .ெ ச ய் யு ள் வடிவில் இருந்தன. முதல் முதலாக வீரமாமுனிவரே சொற்களை அகர வரிசையில் அடுக்கிப் பொருள் எழுதி இக்கால அகராதி நூற் களின் அமைப்புக்கு வித்திட்டார்; அதல்ை முனிவர், ‘தமிழ் அகராதியின் தந்தை’ என் னு ம் சிறப்புப் பெயரால் செ ல் ல மா க அழைக்கப்பெறுகிரு.ர். இஃதன்றி, வட்டார வழக்குத் தமிழ் அகராதி’ ஒன்றும் இவர் இயற்றியுள்ளார்.

இவ்வாறு தமிழில் பன்னூற்கள் இயற்றிய முனிவர், தமிழ்- இலத்தீன் பாலமாகத் தமிழ் தொடர்பாக இலத்தீன் மொழியிலும் பல நூற்கள் அருளியுள்ளார். இவர், திருக்குறளின் அறத்துப் பாலையும் பொருட்பாலேயும் இலத்தீன் மொழியில் பெயர்த்துள்ளார். தமிழில் தாம் எ ழு யு தி ள் ள