பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சித் திறன் நன்கு சுடர்விட்டுத் தெரிகிறது. நூலின் இறுதியில், தமிழ் - இலத்தீன், அ. க ராதி அமைத்திருப்பது போற்றுதலுக் குரிய ஓர் அரிய முயற்சி எனலாம்.

ஈண்டு எனது விருப்பம் ஒன்றை வெளியிட்டு இந்த அணிந்துரையை முடிக்கிறேன். கால்டுவெல் என்னும் ஆ ங் கி ல ப் பெரியார், ‘திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம்’ எ ன் னு ம் அரிய நூலேப் படைத்ததற்காக, இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர்’ எ ன் னு ம் சிறப்புப் பட்டம் அளித்துச் சிறப்புப் ெப ற் ற து எனப் புலவர் சுந்தர சண்முகளுர் ஒ ரி ட த் தி ல் ( பக்கம் - 15, 16) எழுதியிருப்பதைக் கண்ணுற்று வியப்பெய்தினேன். ஆங் கி லே ய க் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தார்க்கு, தென்னிந்தியத் திராவிட .ெ மா ழி க ளி ட ம் என்ன அவ்வளவு அக்கறை வேண்டிக்கிடக்கிறது? ஆ யி னு ம், அ றி ஞ ர் கால்டுவெல் அ வ ர் க ளி ன் அரிய உழைப்பினைப் பாராட்டுமுகத்தான் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது அந்தப் பல்கலைக் கழகம்.

அங்ஙன மெனில், புதிய முறையில் தமிழ் - இலத்தீன் ஒப்பிலக்கண ஆராய்ச்சி நூல் இயற்றிய புலவர் சுந்தர சண்முகளுர்க்கும் அத்தகையதொரு சிறப்புச் செய்ய வே ண் டு ம் என யான் விரும்பு கிறேன், எந்தப் பல்கலைக் கழகமாவது, அப்படி யொரு சிறப்பினே, ஆராய்ச்சித் திறன் மிக்க நம் புலவருக்கு அளித்துப் பெருமை கொள்ளவேண்டும் என்பது அடியேனது அவா!

I-7-1970 ரா. தேசிகன்