பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


அச்சிடப்படுமுன்னரே, பலரால் பல படி க ள் எடுத்துப் படிக்கப்பட்டு மிகவும் செல்வாக்கு பெற்றிருந்தது.

(5) பெஸ்கி இலத்தீனில் எழுதிய கொடுங் தமிழ் இலக்கணம் முதலில் ஆங்கிலத்தில் பெயர்க்கப் பட்டுப் படிக்கப்பட்டு வந்தது; பின்னர்ச் செந்தமிழ் இலக்கணம் பெயர்க்கப்பட்டது.

இவ்வாறு இன்னும் பல பயனுள்ள குறிப்புக் களே மொழிபெயர்ப்பாளர் முகவுரை அறிவிக்கிறது. இதிலிருந்து, வீரமாமுனிவரின் படைப்புக்கள் தமிழ் மொழியை ‘உலகத் தமிழ் ஆக்கத் துணைபுரிக் அதுள்ளமை புலகுைம்.

மொழிபெயர்ப்பாளர் முகவுரையை யடுத்து,

THE AUTHOR'S INTRODUCTION

Ο

C. J. Beschi To The Pious Missionaries of The Society

of Jesuits Greeting என்னும் தலைப்புடன் ஆசிரியர் வீரமாமுனிவரின் முன்னுரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப் பட்டுள்ளது. இந்நூலைப் பற்றி ஒருசிறிது அறிந்து கொள்ள உதவும் வகையில், ஆசிரியர் முன்னுரையின் முதல் பத்தியிலுள்ள முதல் தொடர் அப்படியே வருமாறு: -