பக்கம்:தமிழ் உரை நடை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் மொழிகள் தோன்றிய நாளே இன்று ஆசிரியர் சிலர் ஆய்ந்து கண்டுகொண்டிருக்கின்றனர். உலகில் உள்ள மக்கள் இன்று பல்வேறு மொழிகளைப் பேசுகின்ருர்கள்; என்ருலும், அவற்றை ஒரு சில இனங்களாகப் பிரித்து, அவ்வவற்றின் இலக்கணங்களை மொழிநூல் ஆராய்ச்சி யாளர் காட்டுகின்றனர். ஆயினும் அம்மொழிகளின் தொன்மையையும், அவை தோன்றிய நாளேயும் வரை யறுக்கப் பெரிதும் இடர்ப்பட வேண்டியுள்ளது. மனித வரலாறு எப்படி வரையறுக்க முடியாத ஒன்ருகிக் காலத் தால் நீண்டுகொண்டே செல்லுகிறதோ, அப்படியே மொழி வரலாறும் செல்கிறது என்பர் ஆய்வாளர். அப். படித் தோன்றிய மொழியும், அன்றே இன்றுபோலப் பல வகைகளாகப் பிரிந்தோ, பண்பட்டோ இருக்கவழியில்லை. மனித வரலாற்றில் எங்கிலேயில் பழங்கால மனிதன்-கற் காலத்துக்கு முன் வாழ்ந்த மனிதன்-வாழ்ந்தானே, அதே நிலையில் அக்கால மொழியும் வாழ்ந்திருக்கும்; அம்மொழி ஒன்றிலிருந்து பல கிளேத்து, மக்கள் பிரியப் பிரியப் பல்கிப் பெருகியிருக்க வேண்டும். தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் திராவிட மொழிக் குடும்பமே அன்றும் இன்றும் ஆட்சி செலுத்து கிறது. அக்குடும்பத்துள் சிறந்தது தமிழ்மொழியே என் றும் காலத்தால் முந்தியதும் அதுவே என்றும் வரலாற் ருளரும் மொழி ஆய்வாளரும் ஒருசேர ஒப்புக்கொள்ளு கின்றனர். இத்தகைய தமிழ் மொழியில் என்று இலக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/10&oldid=874361" இலிருந்து மீள்விக்கப்பட்டது