பக்கம்:தமிழ் உரை நடை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ் உரைநடை தோன்றும் எழுத்துக்களே இட்டு எழுதுவதையும் காண லாம். இந்த முறை இக்காலத்தில் நாம் கையாளப் பெருத ஒன்று. காற்புள்ளி இடாவிடின் புணர்ச்சியால் வரும் ஒற்றைச் சேர்ப்பதும், புள்ளி இடின் ஒற்றை நீக்குவதும் இன்று மரபாகக் கொள்ளுகிருேம். களவியல் உரையில் அங்கில இல்லை. தொல்காப்பியர் காலத்தில் செயப்பாட்டுவினை இல்லை. அது பின்னே தோன்றிற்று என்பர் இலக்கண நூலார். ஆயினும், இவ்வுயைாசிரியர் முதற் குத்திரத்துக் களவெனப் படுவது' என்பதன் உரையில் அந்தப் படுவதால் பெறுவது பொருட்சிறப்பு என்பதை எடுத்துக் காட்டுகின்ருர்இன்னும் ஆங்காங்குப் பின் நன்னூலார் இலக்கண அமைதிக்கு ஏற்பவும், முந்து நூல் இலக்கண அமைதி தழுவியும் தாமே பலவற்றிற்கு இலக்கணம் காட்டிச் செல்லுதல் அறிந்து மகிழத்தக்கதாகும். இவ்வுரையில் வடமொழிச் சொற்கள் அதிகமாகப் பயிலப்பெறும் என்பதை மேலே கண்டோம். நாம் காட்டிய சில உதாரணப் பகுதிகளிலேயே அவ்வுண்மை தெற்ற்ென நன்கு தெளிவுறும். சிட்டர், (6) பிராமணன், (7) மூத்திர புரீடம், (10) வாசகம், (59) பரியம் (140) போன்ற சொற்கள் உரையில் பலவாக விரவி உள்ளமை யும் காண்கின்ருேம். மதுரை ஆவணி அவிட்டம், உறை யூர்ப் பங்குனி உத்திரம், கரூர் உள்ளி விழாப் போன்ற னவும் (பக்கம் 101) இவ்வுரையில் எடுத்தாளப் பெறு கின்றன. இவ்விழாக்களைப் பற்றி நாம் சங்க இலக்கி யங்களில் காண்கின்ருே மில்லை. மிக நீண்ட பாடலாக அமைந்த மதுரைக் காஞ்சியிலேயே ஆவணி அவிட்ட விழாக் குறிக்கப்பெற்றிலது. பிற்காலத்தில் ஏழாம் ஆாற்ருண்டில் தேவராத்தின் வழியே கோயில்கள் பெருக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/101&oldid=874364" இலிருந்து மீள்விக்கப்பட்டது