பக்கம்:தமிழ் உரை நடை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரை நடையில் ஒரு மைல் கல் 93. அவற்றில் ஆற்றப்பெறும் விழாக்களுள் இவை சிலவாக அமையும் என்று கொள்ளல் பொருந்துவதாகும். இனி, இவ்வுரையில் மேற்கோளாக எடுத்தாளப் பெற்ற பாண்டிக் கோவையைக் கண்போம். கோவை நூல் சங்ககாலத்தே அறியாத ஒன்று. எனவே, நக்கீரர் இக்கோவையை மேற்கோளாகக் காட்டியிருக்க மாட் டார். இவ்வுரை வழி வழியாகத் தொடர்ந்து வருங்கால் இடையிலே யாரோ ஒரு புலவர்-கோவை இலக்கணம் தோன்றி வாழ்ந்த காலத்திலிருந்து புலவர்-இந்தக் கோவையை எழுதியோ அன்றிச் சேர்த்தோ உரைக்கு ஏற்றம் தேடி வைத்தார் என்பது பொருந்தும். பின்பு. இவ்வுரை ஏட்டிடை எழுதப் பெறுங்காலத்து இப்பாட்டும். சேர்க்கப்பெற்றே இருக்க வேண்டும் என்பது மட்டும் தெளிவு. இப்பாண்டிக் கோவையில் வரும் பல நிகழ்ச்சி கள் காலத்தால் பிந்தியனவாக வேண்டும். இதில் கூறப்பெறும் போர்களுள் பல சங்ககாலத்தில் குறிக்கப் பெருதவை. ஓர் அரசனைப் பற்றிப் போற்றும் இத் துணைப் பெருநூலே சங்ககாலத்துக்குப் பின் நெடுங் காலம் கழித்தே தோன்றியிருக்க வேண்டும். ஆகவே, பாண்டிக்கோவை நூலமைப்பே, இவ்வுரை காலத்தாற். பிந்தியது என்பதைக் காட்டும். இதில் குறிக்கப்பெறும் போர்களும் சங்ககாலத்துக்குப் பிந்தியனவே என்னுமாறு: அமைகின்றன. இவ்விலக்கியத்தில் போற்றப்படும் பாண்டியன் இன்னன் எனத் திட்டமாகக் காண முடியாவிடினும், அவன் பராங்குசன் (87), அரி கேசரி (203), நெடுமாறன் (109) நெல்வேலி வென்ருன் (108) சத்துரு துரந்தரன் (20). முதலிய பெயர்களால் குறிக்கப்பெறுவதை அறிகிருேம், அவற்றுள் சில பெயர்கள் சங்க காலத்தை ஒட்டிய்வை எனக் கருத வாய்ப்பு உளதேனும், அவர்தம் செயல்வழி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/102&oldid=874365" இலிருந்து மீள்விக்கப்பட்டது