பக்கம்:தமிழ் உரை நடை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரை நடையில் ஒரு மைல் கல் 59 காட்டாக அமைய, அடுத்த எட்டாம் நூற்ருண்டில் இக் நூல் எழுத்து வடிவில் உருவாயிற்று என்னலாம். இப்பகுதியை முடிக்குமுன் இந்நூல் தோன்றிய வழியையும் சிறிது எண்ணிப் பார் க்க வேண்டும். பெரும்பஞ்சம் நேர்ந்த பின் பொருளதிகாரம் காணுது கவன்ற பாண்டியனது மனக் கவலையை மாற்றுவதற்காக மதுரைச் சொக்கேசர் இந்தச் சூத்திரத்தைச் செய்து .பீடத்தின் கீழ் வைக்க, மறுநாள் திருக்கோயில் வழி பாடு செய்பவன் கையில் இது கிடைக்க, பின்பு இதை அரசன் பெற்று மேற்கண்டவாறு சங்க நூற் புலவர்களைக் கொண்டு உரை செய்வித்தான் என்ற வரலாற்றை இவ் :வுரையே நமக்குத் தருகின்றது. இது எத்துணேப் பொருத் தம் என்பது நமக்கு ஈண்டு ஆராய்ச்சிக்குத் தேவை இல்லை. என்ருலும், தமிழ்நாட்டில் பொருளதிகாரம் வழக்கத்தில் இல்லாத ஒரு காலத்தில் இந்நூல் தோன் மிற்று என்று கொள்ளல் பொருந்தும். கடைச்சங்க காலத் தில் தொல்காப்பியம் அவைக்கள நூலாக இருந் ததை இந்நூல் உரையே ஒப்புக்கொள்ளுகிறது. தொல் காப்பியப் பொருளதிகாரம் நாட்டில் இருந்திருப்பின், இதை மக்கள் விரும்பியிருக்க மாட்டார்கள். இன்றும் காட்டில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மக்கள் உள் :ளத்தில் இடம் பெற்ற அளவுக்கு இந்நூல் பெறவில்லை என்னலாம். இதை இறையனர் என்ற புலவர் ஒருவர் செய்தார் என்று கொள்வது பொருத்தம் என்றும், கடவுளே செய்தார் என்று கொள்வது பொருத்தம் அன்று என்றும் இன்றைய ஆராய்ச்சி உலகம் கொள்ளுகிறது. எப்படி யாயினும், தொல்காப்பியத்தை நோக்க இந்நூல் சிறந்த தன்று என்பது புலவர் துணிபு. r இவ்வுரை தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாகும். சங்க காலத்தில் உரைநடை நூல்கள் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/104&oldid=874367" இலிருந்து மீள்விக்கப்பட்டது