பக்கம்:தமிழ் உரை நடை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேய உரையாசிரியர்கள 99 ஒன்பதின்மர் உரை எழுதியுள்ளனர் என அறிகின்ருேம். என்ருலும், எல்லோருடைய உரைகளும் இன்று நம்க்குக் கிடைக்கவில்லை. அவர்தம் பெயர்களேயாவது வெண்பா வழியே காண்போம். தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி பரிமேலழகர்-திருமலையர் மல்லர் கவிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற் கெல்லஉரை செய்தார் இவர். ' இவ்வாறு திருக்குறளுக்குப் பதின்மர் உரை செய் தாலும், நால்வர் உரைகளே இன்று நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன. அங்கால்வ்ர் பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, காளிங்கர் ஆவர். பரிமேலழகர் குறளுக்கு மட்டு மின்றி, சங்க இலக்கியமாகிய பரிபாடலுக்கும் உரை எழுதி யுள்ளார். இவர் உரையால் இரண்டு நூல்களும் சிறந்துள்ளன. என்பர். சங்க இலக்கியங்களுள் ஒன்ருகிய பதிற்றுப்பத்துக்கும் பழைய உரை ஒன்று உண்டு. அது போன்றே புறநானூற்றுப் பாடல்களுள் சிலவற்றிற்கும் வேறு சிலவற்றிற்கும் பழைய உரைகள் காண்கின்ருேம். புறநானூற்று உரை அடியார்க்கு கல்லார் உரையினும் முற்பட்டதென்பது தெரிகிறது. அகநானூற்றிற்கும் பழையதாகிய அரும்பத உரை உண்டு. இப்படிப் பல சங்க இலக்கியங்களுக்கும் அறிஞர் பலர் உரை வகுத்துள்ளனர். இவர்கள் எல்லோருடைய பெயர்களும் நமக்குத் தெரியும் வாய்ப்பு இல்லை; என்ருலும், மேலே கண்டபடி ஒரு சிலர் தம் பெயர்களையும், அவருள் ஒரு சிலருடைய வாழ்க்கை வரலாறுகளையும் அறியும் கிலே இருப்பது மகிழ்வுக்கு உரிய தாகும். . புறநானூறு 5-ஆம் பதிப்பு-டாக்டர் ஐயர் அவர்கள் முன்னுரை, பக். 12, 13. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/108&oldid=874371" இலிருந்து மீள்விக்கப்பட்டது