பக்கம்:தமிழ் உரை நடை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னைய உரையாசிரியர்கள் 101 இதற்கு மற்ருேர் உரை இருந்திருக்கலாம் என்பதையும் எனினும் கிடைக்கப் பெற்றில தென்பதையும் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் சிலப்பதிகார முன்னுரையில் கூறியுள்ளார்கள்.'கச்சினர்க்கினியரால் மறுக் கப்படுவனவற்றுள் சில இவருடைய கொள்கைகளாக இருத் தல் பற்றி, இவரது காலம் கச்சினர்க் கினியரது காலத்துக்கு முக்தியதாக இருக்கலாம்,' என அம்முன்னுரையில் இவரே குறிக்கின்ருர். இவர் கருத்தையே திரு. ந. மு. வேங்கடசாமி காட்டார் அவர்களும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். எனவே அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் பதின்ைகாம் நூற்ருண்டிற்கு முற்பட்டவர் என்று கொள்ளு தல் பொருத்தமானதாகும். . பதிற்றுப்பத்திற்கும் ஒரு பழைய குறிப்பு உரை உண்டு என்பதைக் கண்டோம். என்ருலும், அவ்வுரை எழுதியவர் இன்னர் என்பது திட்டமாகத் தெரியவில்லை. ஆயினும் அவ்வுரை சிறந்துள்ளது. அவ்வுரை யின்றேல் பதிற்றுப் பத்தின் பொருளே இக்காலத்து உணர்ந்து கொள்ளுதல் அரிது என ஐயர் அவர்கள் தம் முன்னுரையில் குறித் துள்ளார்கள். அவ்வுரையாசிரியர் நேமிநாதம் என்னும் சின்னூல் செய்த குணவீர பண்டிதருக்குப் பிற்பட்டவர் என்பதை, பதிற்றுப்பத்து 76-ஆம் பாடல் 11-ஆம் அடியின் உரைகொண்டு ஆய்ந்து எடுத்துக் காட்டியுள்ளார்கள் டாக்டர் ஐயர் அவர்கள். இவற்றை எண்ணிப் பார்ப்பின் l 1. சிலப்பதிகாரம், (ஆரும் பதிப்பு) முன்னுரை பக்கம், X . . 2. டிெ டிெ பக்கம் xix 3. சிலப்பதிகாரம், பக்கம், 28 4. பதிற்றுப்பத்து மூலமும் உரையும் (ஆரும் பதிப்பு) முன்னுரை, பக்கம், vi. 5. டிெ பக்wi.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/110&oldid=874374" இலிருந்து மீள்விக்கப்பட்டது