பக்கம்:தமிழ் உரை நடை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னைய உரையாசிரியர்கள் 103 தவர் என்பது திண்ணமாதலால்-இவர் பதி னேராம் நூற்ருண்டிற்கும் பதின்ைகாம் நூற்ருண் டிற்கும் இடைப்பட்டவர் என்பது தேற்றம். சிலா சாசன ஆராய்ச்சியாலும் மற்றும் சில காரணத் தாலும் சேனவரையருடைய சமகாலத்தவரும் அவருக்குப் பிராயத்தினற் சிறிது குறைந்தவருமாகக் கி. பி. 1272 ல் வாழ்ந்திருந்தவர் என மு. இராகவ ஐயங்கார் ஸ்வாமிகள் சாசனத் தமிழ்க்கவி சரித்திரம் என்னும் நூலில் எழுதியுள்ளார்,' என்று விளக்கு கிரு.ர். இனி, இவர்களுள் சிலருடைய காலத்தை நேமிநாதர் காலத்தோடு ஒத்துக் கூறுதலால், அங் நேமிநாதர் காலத் தைக் காண்டல் பொருந்துவதாகும். நேமிநாதம், வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல் ஆகிய இரண்டையும் எழுதியவர் குணவீரபண்டிதர் என்பதைப் பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். அவ் வச்சணந்தி மாலே முன்னுரையில் அவர் காலம் நன்கு ஆராயப் பெறுகிறது. அவர் திரிபுவன தேவன் என்ற மன்னவன் காலத்தில் வாழ்ந்தவர் என்று ஓர் அகவல் மேற்கோள் காட்டப் பெறுகின்றது. ' குருத்தவர் முடிக் கொற்றவர் கோமான் திருத்தகு மணிமுடித் திரிபுவன தேவன் என்னும் அரசன் காலத்தில் இந்நூல் செய்ததென உணர்க, என்று அது எடுத்துக் காட்டுகிறது. நேமிநாதம் பதிப்பித்த திரு. ரா. இராகவையங்கார் அவர்கள் அதன் முன்னுரையில், இவருடைய (அதாவது ஆசிரியருடைய) 1. திருக்குறள், வை. மு. சடகோபராமாநுஜாசாரியார் பதிப்பு-முன்னுரை, பக்கம் 20-21. - 2. கா, ர. கோவிந்தராச முதலியார் (கழகப் பதிப்பு) முன்னுரை, பக்கம் 7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/112&oldid=874376" இலிருந்து மீள்விக்கப்பட்டது