பக்கம்:தமிழ் உரை நடை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. தமிழ் உரை கம்ை காலம் இன்றைக்கு எண்ணுாறு வருடங்களுக்கு முன் இருந்த திரிபுவன தேவன் எனப் பெயரிய குலோத்துங்கன் காலம், என எழுதியுள்ளனர். இவற்ருல், திரிபுவன தேவன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற குலோத்துங்க சோழன் காலத்தில் இந்நேமிநாதர் வாழ்ந்தார் எனக் கொள்ளல் பொருத்தமாக அமைகின்றது. இத் திரிபுவன தேவன் என்ற சிறப்புப் பெயர் மூன்ரும் குலோத்துங்க லுக்கு உரிய பட்டப் பெயர்களுள் ஒன்று. இக்குலோத் துங்கன் கி. பி. 1178 முதல் 1218 வரை அரசாண்டான். எனவே, இக்காலமே நேமிநாதர் காலமாகும். மு. இரா கவ ஐயங்கார் இக்காலத்தை மேலே கி. பி. 1272 எனக் குறிப்பிட்டார் என்பது கண்டோம். அவர் அந்நூல் எழுதும் காலத்து வரலாறு வரையறுக்கப்பட்ட நிலையில் இல்லே ஆதலாலும், பின் கல்வெட்டுக்கள் வழியும் அவற்றின் ஆய்வு வழியும் இக்குலோத்துங்கன் காலம் திட்டமாக வரையறுக்கப்பட்டமையாலும், இவனே திரிபு வனன் எனச் சிறக்க விளங்கியவன் ஆதலாலும், மேலே மு. இராகவையங்கார் காட்டிய கி. பி. 1272-ஆம் ஆண்டும் அதைச்சார்ந்த நாட்களும், சோழர் வீழ்ச்சியைக் காட்டும் காலமாதலாலும் மூன்ரும் குலோத்துங்கன் காலமே (1178-1218) நேமிநாதர் காலம் எனக் கொள்ளல் பொருந்தும். இக்கருத்தைச் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய ரா, இராகவையங்காருடைய இன்றைக்கு எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் என்ற தொடர் வலியுறுத்துவதாகும்." இவ்வாறு பல வகையான ஆராய்ச்சி முடிவுகளும் உரையாசிரியா அனைவரும் கி. பி. பதினேராம் நூற்ருண் 1. (a) பண்டாரத்தார்-சோழர் வரலாறு. (b) தமிழக வரலாறு (அ. மு. ப.) பக். 254 2. நேமிநாதம், மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/113&oldid=874377" இலிருந்து மீள்விக்கப்பட்டது