பக்கம்:தமிழ் உரை நடை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னைய உரையாசிரியர்கள் 105 டிற்கும் பதின்ைகாம் நூற்ருண்டிற்கும் இடையில் வாழ்க் தவர் எனக் காட்டுகின்றன. இவ்வாறு காலத்தால் வரையறுக்கப்பட்ட உரையாசிரியர்களது வாழ்க்கையை நம்மால் அறுதியிட முடியாது. உரையாசிரியருள் சிலர் பெயர்கூட நம்மால் அறியமுடியாது போய்விட்டது. ஒரு சிலரைப்பற்றிய குறிப்புக்களே நமக்குக் கிடைக் கின்றன. பலவற்றிற்கு உரை எழுதிய நச்சினர்க்கினியர் மதுரையில் பரத்துவாச குடியில் தோன்றிய ஓர் அந்த .ணர் என்பது நன்கு புலகிைன்றது. அது போன்றே பரிமேலழகரும் காஞ்சியில் உலகளந்த பெருமாள் கோயி அலுக்குப் பணி புரிந்த வைணவ அந்தணர் குலத்திற் -பிறந்தவர் என்பதை அறிகிருேம். நம் கால வரலாற் றுக்கு உறுதுணையாக கின்ற நேமிநாதம் செய்த குணவீர பண்டிதர் தொண்டை மண்டலத்தவர் எனத் தொண்டை மண்டல சதகம் எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு உரையாசிரியர்களுள் சிலரைப்பற்றிய குறிப்புக்கள் அங் கொன் று ம் இங்கொன்றுமாகக் கிடக்கின்றனவே வயன்றி, முறையாக வரையறுத்த வகையில் அவர்கள் வாழ்க்கையை அறிய வழியில்லை. தொல்காப்பியம் முடிய உரை எழுதிய இளம்பூரணரும், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும், சேவைர்ைய ரும், பிறரும் தத்தம் வாழ்க்கையையும், பெயரையும். ஊரையும், புகழையும் உலகினர்க்குக் காட்ட வேண்டும்" என்று கருதாது, பழந்தமிழ் நூல்களுக்கு-இலக்கிய இலக்கணங்களுக்கு-உரை கண்டு தமிழை வளர்த்தார் கள் என்பது நன்கு தெரிகிறது. மேலும், அவர்கள் காலமே தமிழர் அரசியல் வாழ்வும் உச்ச நிலையில் இருந்த காலம் என்னலாம். மேற்கே யவன நாடு தொடங்கி, கிழக்கே சீன நாடு வரை தமிழ் நாட்டு மரக்கலங்கள் வாணிபத்தின் 1. தொண்டை மண்டல சதகம், செய். 32.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/114&oldid=874378" இலிருந்து மீள்விக்கப்பட்டது