பக்கம்:தமிழ் உரை நடை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரை நடையின் தோற்றமும் வளர்ச்சியும் - 3 காலத்தில் பாட்டுக்களே இருந்தன. எனவே, பாட்டே முன் தோன்றிற்று, என்று சுலபமாக யாரும் கூறிவிட முடியாது. ஏனெனில் தொல்காப்பியத்திலேயே உரை நடையைப் பற்றிய இலக்கணம் உள்ளது. இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புதல் மரபாதலின், அக்காலத்தில் வாழ்ந்த உரைநடை இலக்கியத்தைக் கண்டே அவர் அத்தகைய இலக்கணத்தைச் கெய்தார். எனவே, பாட்டும் உரையும் மிகு பழங்காலத் தொட்டே தமிழில் வாழ்ந்து வருகின்றன என்பது பொருந்தும். தமிழில் மட்டுமல்லாது, பொதுவாக எல்லா மொழி களினும் பாட்டும் உரையும் பயின்று வந்தாலும், அவற் றுள் எது முன் தோன்றியது என்பது ஆராய வேண்டிய ஒன்றேயாகும். எனது கருத்து, பாட்டினும் உரை நடை தான் முன்னே தோன்றியிருக்க வேண்டும் என்பது. மொழி வளர்ச்சியை நன்கு ஆராய்ந்தாலும், பாட்டு முதலில் தோன்றக் காரணம் இல்லை என்பது நன்கு புலஞகும். மொழியின் முதல் கிலேயாய எழுத்துக்கள் தோன்றி, அவ்வெழுத்துக்களைத் தனித்தனியாக காவால் சொல்விச் சொல்லி, இரண்டோர் எழுத்துக்களைப் பிணத்து, பிறகு மெல்லப் பேசத் தொடங்கியிருப்பார்கள் முன்னேய மனிதர்கள். அவர்கள் அவ்வாறு பேசியது உரைநடையே யன்றிப் பாட்டாக அமையாது. இலக்கிய இலக்கணங் கள் நன்கு பயின்ற மக்கள்கூட இன்று ஒருவருடன் ஒருவர் கலந்து பேசும்போது உரைகடையில் பேசுவதைத்தான் காண்கின்ருேம். இப்படியிருக்க, அந்த முதல் மனிதர்கள் மட்டும் எப்படிப் பாடி யிருப்பார்கள் ? கரடு முரடான சொற்களே நிறுத்தி நிறுத்தி, ஒன்றன் பின் ஒன்ருக மெள்ளப் பொருத்தி, உரை கடையாகவே அவர்கள் பேடு யிருக்க வேண்டும். மொழி தோன்றிய அந்த நாளிலேயே எந்த மனிதனும் அழகாகப் பாடிவிடமாட்டான் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/12&oldid=874384" இலிருந்து மீள்விக்கப்பட்டது