பக்கம்:தமிழ் உரை நடை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ன்ைய உரையாசிரியர்கள் 111 ஆண்பாற் கிளவியும், முன்னுறச் செப்பலும், பின்னிலை முயறலும், கணவனுள் வழி இரவுத்தலைச் சேறலும், பருவம் மயங்கலும், இன்னேரன்ன பெண்பாற் கிளவியும், குற்றிசையும் குறுங்கலியும் இன்ைேரன்ன பிறவுமாகி ஒத்த அன்பின் மாறு பட்டு வருவனவெல்லாம் கொள்ளப்படும்.' என்று ஐம்பத்து நான்காம் குத்திரத்திற்கும்; ' 'அறனும் பொருளும் இன்பமும்’ என்னது, "இன்பமும் பொருளும் அறனும் என்றது என்னை யெனின், பல வகை உயிர்கட்கும் வரும் இன்பம் இரு வகைப்படும். அவையாவன, போகம் நுகர் தலும் வீடு பெறுதலும் என. அவற்றுள் வீடு பேறு துறவறத்தில் நின்ருர்க் கல்லாது எய்தல் அரிதா யிற்று.போ.க நுகர்தல் மனையறத்தார்க் கெய்துவது. அவரெய்தும் இன்பமும் அவ்வின்பத்திற்குக் காரண மாய பொருளும் அப்பொருட்குக் காரணமாகிய அறனும் எனக் காரிய காரணம் நோக்கி வைத்தார் என்க. ’’’ எனக் களவியல் முதலாம் குத்திரத்திற்கும், "இறந்த காலமுதலியவற்ருற் கூறுதலாவது, 'முன்புள்ளார். இவ்வாறு செய்து நன்மை பெற்ருர்: இவ்வாறு செய்து தீமை பெற்ருர், எனவும், 'இப்பொழுது இன்னேர் இவ்வாறு செய்து பயன் பெரு நின்ருர்,' எனவும், இவ்வாறு செய்தார் பின்பு நன்மை தீமை பெறுவர் எனவுங் கூறுதல்.”* எனக் கற்பியல் பன்னிரண்டாம் சூத்திரத்திற்கும் : பரிபாட்டாவது, பரிந்த பாட்டாம். அஃதா வது, ஒரு வெண்பாவாக வருத்லின்றிப் பல 1. கழகப் பதிப்பு, பக். 69 2. டிெ பக். 160. 3. டிெ பக். 303,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/120&oldid=874385" இலிருந்து மீள்விக்கப்பட்டது