பக்கம்:தமிழ் உரை நடை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தமிழ் உரை நடை உறுப்புக்களோடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது. 'ஒத்தவை" என்பது அளவானும் பொருளானும் இனத்தானும் வேறு பகுக்கப்படாத சமநிலை வெண்பாக்களாம். அவை யாவன, நான்கடியான் வருவன. இவ்வாசிரியர் நான்கினை அளவென்றும், ஏறியவற்றை நெடி லென்றும், குறைந்தவற்றைக் குறள், சிந்து என்றும் வழங்குவராதலின், இவற்றுள் பொருளானும் இனத்தானும் வேறு பகுக்கப்படாத நெடுவெண் பாட்டும் குறுவெண்பாட்டும் சமநிலை வெண் பாட்டும் என மூவகையானும் வரும்.' எனச் செய்யுளில் 114-ஆம் குத்திரத்திற்கும் உரை கண்டு, அவ்வவ்விடத்திற்கும் பொருள் அமைப்பிற்கும் ஏற்ற வகையில் ஆசிரியர் இளம்பூரணர் எடுத்த பொருளே விளக்கும்முறை அறிந்து இன்புறற்பாலதன்ருே! இவற்றின் பொருள் நயத்தைப் பற்றி காம் இங்கே அதிகம் கருத் திருத்த வேண்டா. இவர்தம் உரை கடைப் போக்கும் அவ்வுரை செல்லும் நெறியும், அவ்வுரை நடையால் தாம் விளக்க விரும்பிய பொருளைக் காரண காரியத் தொடர் போடு நிலை நாட்டும் நிலையும் எண்ணத்தக்கன. இவ்வாறே ஒவ்வோர் உரையாசிரியர் தம் உரைத்திறனையும் விளங்க உரைப்பின் நீளும். எனவே, ஒவ்வோர் உரையாசிரியர் வாக்கிலும் இரண்டொன்று எடுத்துக்காட்டி அமைதல் சாலும் என நினைக்கின்றேன். - சேவைரையர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதினவர். அவர் வேறு எந்த நூற்கும் உரை எழுதினர் என்பது திட்டமாகத் தெரியவில்லை. என்ருலும், இந்த ஒர் உரையே அவரது உரைத் திறனே நன்கு விளக்கப் போதிய சான்ருய் அமைந்துவிட்டது. - 1. கழகப் பதிப்பு. աս. 482.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/121&oldid=874386" இலிருந்து மீள்விக்கப்பட்டது