பக்கம்:தமிழ் உரை நடை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ສ່ໃກນ உரையாசிரியர்கள் - 115 மின்றி வழங்குபவோ என்று ஐயங்குறித்துக் கூறி னர். அஃதேல், இன்ன எழுத்து இப்பொருள் படும் எனவும்; இத்தன்மைத்து எனவும், இப்பயன் தரும் எனவும் மற்றை நூலகத்தும் பிருண்டும் உரைக்கப் படுமாதலான், காரணம் உரைப்பரிது குற்றம்,’ எனின், அதற்கு விடை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.' என்பதும் இவை போன்ற பிறவும் தெய்வச் சிலையார் உரைநடையையும், அவர் காட்ட விரும்பும் கருத்தை. விளக்கும் தெளிவையும் கன்கு காட்டுகின்றன என அறியலாம். . இவர்களேயன்றித் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய மற்ருெரு சிறந்த உரையாசிரியர் பேராசிரியர் ஆவர். அவர் பொருளதிகாரத்தில் சில இயல்களுக்கே உரை எழுதிச் சென்ருர் என்ருலும், அவ்வுரை மற்றவற்றினும் சிறந்து கன்கு பொருள் செறிந்த உரையாகச் செல்லுகிறது என்பதைக் காணல் தகும்: பேராசிரியர் உரைநடைத் திறத்திற்கு இரண்டு -ஏதுக் காட்டி முடிப்போம்: செய்யுளியல் 176-ஆம் சூத் திரத்திற்கு உரை கூற வந்த அவர், பல்வேறு வகையில் இடங் தலைப்பாடு, பாங்கற் கூட்டம் முதலியன காட்டித் தாம் கொண்டதை நிறுவுகின்ருர், அங்கிலேயில் அவர், 'மற்று, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலை மகனைப் பாங்கன் கண்டு, "இவ்வேறுபாடு எற்றின யிைற்று?’ என்று வினவுமன்றே? அதனல், பாங்கற் கூட்டம் நிகழ்ந்த பின்ன ரன்றி இடந்தலைப்பாடு நிகழாவாம் பிறவெனின், அற்றன்று: யாழோர் கூட்டம் உலகியலாதலான் இல்லதன்ருமாகவே உலகத்தார் நிறையுடையராகி மறை வெளிப்படா மல் ஒழுகுவாரும், மறை வெளிப்படுத்து விளம்பும் 1. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு பக். 213.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/124&oldid=874389" இலிருந்து மீள்விக்கப்பட்டது