பக்கம்:தமிழ் உரை நடை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னைய உரையாசிரியர்கள் 119 கடையும் சிறந்தன வாகும். இவர்தம் உரைப்போக்கும் மேற்கோள்களும் இவர் காலத்தால் பிந்தியவர் என்பதைக் காட்டுகின்றன. இவர் சிந்தாமணி, பத்துப்பாட்டு, கலித் தொகை முதலிய இலக்கியங்களுக்கும் உரை கண்டார் என்பதை அறிந்தோம். அவற்றுள் இரண்டொன்று காணலாம்: 'இதன் கருத்து இச்செய்யுட்கு அங்கமாகிய வருணனைகள் கூறி, அதற்குரிய தலைவனைக் காட்டு கின்ருர், இத்துணையும் அவன் தோன்றற்குக் காரணம் கூறி, அதற்கு முற்பிறப்பில் அன்னப் பார்ப்பைப் பிரித்த தீவினை வந்து குரவரைப் பிரித் தலும் கூற வேண்டுதலின், திருவிழுக் குற்றமை முற் கூறுகின்ரு ரென்றுணர்க. திருவிழுக் குறுதலாவது. கட்டியங்காரற்கு அரசளித்தலும் அமைச்சர் சொற் கேளாமையுமாம்.' என்று சீவக சிந்தாமணியின் பாடலுக்குப் பொருள் கூறுவதோடு அதில் ஆசிரியர் காட்ட கினைந்த கருத்துக் களும், அக்கருத்துக்கள் வழி அடுத்துவரும் நிகழ்ச்சிகளின் எடுத்துக் காட்டும் சிறப்பும் பொருந்த உரை வகுத்துள்ளார். இவ்வாறே பத்துப்பாட்டிற்கும் அவர் கூறிய உரை நயம் ஒன்று காணலாம். முல்லைப்பாட்டிற்கு விளக்கம் கூற வந்த அlொ, 'இப்பாட்டிற்கு முல்லையென்று பெயர் கூறினர், முல்லை சார்ந்த கற்புப் பொருந்தியதல்ை: இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிரு வென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை 1. சீவக சிந்தாமணி, (ஆரும் பதிப்பு), டாக்டர். ஐயர், பக். 105. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/128&oldid=874394" இலிருந்து மீள்விக்கப்பட்டது