பக்கம்:தமிழ் உரை நடை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தமிழ் உரை நடை முல்லையா மென்று கருதி இருத்தலென்னும் பொருடர முல்லையென்று இச்செய்யுட்கு நப்பூதனர் பெயர் கூறினமையின், கணவன் வருந்துணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறவே அவர் கருத் தாயிற்று. 'தானே சேறல் (தொல். அக. கு, 27) என்னும் வழியால், அரசன் தானே சென்றது இப் பாட்டு.' என்று பாட்டின் பெயருக்கே பொருள் விளக்கிச் செல்லும் அவர் உரை நடை சிறந்தது. இவ்வாறு தொல்காப்பியத் துக்கு உரை கண்ட முற்கால உரையாசிரியர்களது உரை நடைப் போக்கைக் கண்ட நமக்கு இது சிலப்பதிகார உரை நடையினுக்கு மாறுபட்டதாகவும், இறையனர் களவியலுரைக்கு வேறுபட்டதாகவும், எளிமையான கடை பெற்றதாகவும், தான் தோன்றிய காலத்திற்கு ஏற்ப வடமொழிக் கொள்கை, சொற்கள் பொருந்தியதாகவும் இருக்கக் காண்கிருேம். இவர்தம் உரைநடைகளே. பழங் கால இலக்கிய இலக்கணங்களே நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகின்றனவாதலின், இவை இன்றேல் தமிழ் இலக்கிய வரலாற்றில் எத்தனையோ இருண்ட காலங்கள் தோன்றி இருக்கும் என்பது உறுதி. இவ்வுரையாசிரியர்கள் காட்டும் எத்தனையோ மேற்கோட் பகுதிகளும், நூல்களும் இன்று நம்மால் அறியக்கூடாத கிலேயில் இருக்கின்றன. அவைக ளெல்லாம் இந்த உரையாசிரியர்கள் காலத்தில் சிறந்தவை யாய் இருந்திருக்கலாம். எனவே, மறைந்த இலக்கிய இலக்கண நூல்களே நாம் இழந்த நிலையிலேயும் அவற்றுள் சிறந்த சிலவற்றையும் அவற்றின் பெயர்களையும் நமக்கு கினைப்பூட்டி நிற்பதோடு, நூலாசிரியர்தம் உள்ளப் பாங்கினை உற்று அறிந்து, அவரவர் பாடிய பாடல் களுக்கும் சூத்திரங்களுக்கும் ஏற்ற பெற்றி அறிந்து உரை கண்டு கின்ற இவ்வுரையாசிரியர்களுக்குத் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/129&oldid=874395" இலிருந்து மீள்விக்கப்பட்டது