பக்கம்:தமிழ் உரை நடை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தமிழ் உரை கடை அனைவரும் ஏற்றுக்கொளவர். எனவே, முதலில் கூட்டிப் பேசும் - சொல் சேர்த்து எழுதும்-உரை நடையே உண்டாகி யிருக்கவேண்டும். பின்பு காலப்போக்கில் மனிதனது அறிவும் கற்பனைத் திறனும் வளர வளர, அவற்றிற்கேற்ப மொழியும் செம்மை நிலையுற்ற பிறகு நெடுங்காலம கழித்தே பாட்டுத் தோன்றியிருக்க வேண்டும்! - சில மேலைநாட்டு ஆய்வாளர்களும் அவர்களே ஒட்டி எழுதும் நம் நாட்டவர் சிலரும் பாட்டுத்தான் முதலில் தோன்றி யிருக்கவேண்டும் என்று எழுதியுள்ளார்கள். அவருள் சர் பிலிப் சிட்னி' என்பார் கூற்றை இங்குக் காண லாம். அவர் பழங்கால இலக்கிய வளம் சான்ற கிரீக்கு இலக்கியத்தை எடுத்துக்கொண்டு, ஹோமர் முதலியவர்களைக் காட்டி, அவர்களுக்கு முன் வேறு இலக்கியங்கள் இல்லாமை யாலும், அவை அனைத்தும் பாட்டுக்களாகவே இருப்ப தாலும் பாட்டு உரைநடைக்கு முற்பட்டு, முதலில் தோன் றியது எனக் காட்ட விரும்புகிருர். அதற்கு ஏற்ற கிலே தமிழ்நாட்டிலும் உள்ளது. இன்று தமிழில் காம் காணும் பழம் பேரிலக்கியங்கள் பாட்டிலேதான் இருக்கக் காண் கிருேம். ஆனல், இதைக்கொண்டு அதற்குமுன் ஒன்றும் இல்லை என்று சொல்ல முடியுமா? அவரே மற்ருே.ரிடத்தில் காட்டுமாறு செய்யுள் அல்லது பாட்டு, புலவனுடைய உயர்ந்த கற்பனைத் திறனைக் காட்டும் சிறந்த கண்ணுடியாய் விளங்குகிறது. கற்பனை நிலைக்கு மனிதன் வருமுன் எத்தனை எத்தனையோ காலங்களைக் கடக்க வேண்டுமே! கற்பனை உளத்தை உலகுக்கு உருவாக்கி எடுத்துக்காட்ட 1. Sir Philip Sidney in Apology for Poetry (Apologie for Poetrie) 2. Ibid. page, 3. 3. Ibid. page, 10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/13&oldid=874396" இலிருந்து மீள்விக்கப்பட்டது