பக்கம்:தமிழ் உரை நடை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேயஉரையாசிரியர்கள் 123; மாம்; அம்; சாரியை, நாவாய்-தோணி முதலா யுள்ள சாரசரங்கள்.1 மடந் தங்கிய நெஞ்சத்தையுடைய கஞ்சனர் செய்த வஞ்சங்களைக் கடந்தவனைத் திசை நான்கினு முள்ள தேவர்கள் போற்ற ஆரணம் தொடர்ந்து முழங்கப் பஞ்சவர்க்காக நூற்றுவர்பால் துரது நடந்தவனை ஏத்தாத நா என்ன நாவே.2 இவையே அடியார்க்கு நல்லார் உரையில் நாம் காணும் சில மேற்கோள்கள். இறுதியாகப் பரிமேலழகர் உரை வளம் கண்டு: முடிப்போம். இவர் குறள், பரிபாடல் இரண்டிற்கும் உரை எழுதியுள்ளமை அறிவோம். அவற்றுள் குறள் உரையே: நன்கு உலகறியப்பட்டதாகின்றது. இவர் எழுத்தின் வழிச் சென்று காண்போம்: உரைப்பாயிரமாக இவர் தொடங்கும் உரையே சிறந்ததாக அமைகின்றது. 'இந்திரன் முதலிய இமையவர் பதங்களும் அந்தமிலின்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்து தற்குரிய உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப் பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள். இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவ தல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின், நூற்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.'" மேலும் இரண்டு உரைகலம் கண்டு முடிப்போம்: 'இருள்சேர் இருவினையும் என்ற குறளின் உரையில், 1. சிலப்பதிகாரம்-ஐந்தாம் பதிப்பு, பக். 372 2. டிெ பக். 457. 3. கழகப் பதிப்பு, பக். 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/132&oldid=874399" இலிருந்து மீள்விக்கப்பட்டது