பக்கம்:தமிழ் உரை நடை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னைய உரையாசிரியர்கள் 125. காரத்திற்கும் ஒக்கும். பொருள்பற்றி நிகழும் குற்றத்தை விலக்குகின்றதாகலின், இது காமம் பற்றி நிகழ்வதாகிய கூடா ஒழுக்கத்தின் பின் வைக்கப் பட்டது.' என்று ஒரு சொல்லுக்குப் பல துறையில் ஆய்ந்து பொருள் காண்கின்ருர் பரிமேலழகர். இப்படியே பலப் பலவாக உரை நயத்தினையும், அமைப்பையும், பிறவற்றையும் கண்டுகொண்டே செல்லின் உரைநடையின் அடுத்த, காலத்தை எட்டிக் காண்பதென்பதுகூட இயலாது. எனவே, இக்காலத்தில் வாழ்ந்த உரையாசிரியர்களது . உரைத் திறனை இந்த அளவோடு நிறுத்தி, மேலே செல்லுதல் அமைவுடைத்தாகும் எனக் கருதுகின்றேன். தமிழர் பொற்காலமெனச் சிறந்த பிற்காலச் சோழர் காலத்தே இவ்வாறு பல்வேறு இடங்களில்-தமிழ் நாட்டுப் பல பகுதிகளில்-தோன்றி, பழம்பே ரிலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் தெளிவான விளக்கங்கள் தந்து தமிழை வளர்த்ததோடு, தமிழ் இலக்கியத்திலேயே தொல்காப்பியரால் சொல்லப்பட்டு இடையில் இல்லையாய், மறைந்த உரைநடை இலக்கியத்தினேப் போற்றிப் புரந்து நாட்டுக்கு அளித்த இந்த உரையாசிரியர்கள் இலரேல் தமிழ் இன்று இருக்கும் நல்ல கிலேயில் இருந்திராது. என்பதை வரலாற்ருளர் நன்கு அறிவர். தமிழ் உரை நடை இலக்கியமே இந்தப் பதினேராம் நூற்ருண்டிற்கும் பதின்ைகாம் நூற்ருண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே தான் பல்வேறு வகையில் நன்கு வளர்ச்சியடைந்தது . என்னலாம். இக்காலத்திலேயே, இவ்வுரை நடையை, ஒட்டி வேருெரு வகையில் தமிழ் நாட்டில் வளர்ந்த உரை நடையை இனிக் காண்போம். 1. திருக்குறள், கழகப் பதிப்பு, பக். 101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/134&oldid=874401" இலிருந்து மீள்விக்கப்பட்டது