பக்கம்:தமிழ் உரை நடை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI கல்வெட்டுக்கள் தமிழ் காட்டில் மிகு பழங்காலக் தொட்டு வீரர் வழி பாடு வழக்கத்தில் இருந்து வந்ததை நன்கு அறிவோம். போர்க்களத்தே தம்மை மறந்து, தம் வாழ்வைத் தியாகம் செய்து, நாட்டுக்காக உயிர் விடும் நல்லவரைப் போற்றும் நாகரிகப் பண்பாட்டு வழக்கம் தமிழ் மக்களிடம் நெடுங் காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்ததைத் தமிழ் காட்டு இலக்கியங்களும் அவற்றின் வழி எழுந்த வரலாறுகளும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. அவ் வீரர்களை மக்கள் எவ்வாறு வழி பட்டார்கள்? மறைக் தாரைப் போற்ற மக்கள் பல்வேறு வழிகளைக் கையாளு வதைக் காண்கின்ருேம். நம் நாட்டில் வாழும் கிறித்த வர்கள், இறந்தவர்களைப் புதைத்து, அப்புதையிடத்தின் மேல் இறந்தாரைப் பற்றிய புகழுரைகளே எழுதிய கற்களே கிலேகாட்டி வழிபடுவதைக் காண்கிருேம். மற்றும் சமயத்துறையில் வல்லவரை அடக்கம் செய்து, ‘சமாதி கட்டி, அதன் மேல் கற்களில் அவர்தம் சிறப்புக்களைப் பொறித்து வைப்பதையும் காண்கின்ருேம். இந்த நிலையில் பழங்காலத்தில், தொல்காப்பியர் காலத்துங்கூட வீரர்களைப் பரவிவந்துள்ள சிறப்பினைக் காண்கின்ருேம். 'ஆடவர் பீடும் பெயரும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்" என்றும், 1. அகம். 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/135&oldid=874402" இலிருந்து மீள்விக்கப்பட்டது