பக்கம்:தமிழ் உரை நடை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் 127 பீடும் பெயரும் எழுதி அதர்தொறும் இனிகட் டனரே கல்லும்.' என்றும் வழங்கும் பழம் பாடல்களுடைய அடிகள் இவ் வாறு சிறந்த வீரர்தம் பெருமையையும் புகழையும் எழுதி, வழியிடைகளிலே கண்டார் உணர்ந்து போற்றும் வகையில் அமைத்து, அதற்குப் பீலியும் மாலையும் குட்டி வழி பட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன. இவ்வாறு போர்க்களத்தில் புறங்கொடாது செயலாற்றிச் சிறந்த வீரரையன்றி அக்காலத்தில் கெல்லும் பூவும் இறைத்து வேருெரு தெய்வத்தையும் தமிழ் மக்கள் வணங்கவில்லை எனவும், அவர்தம் வீர வழிபாடு நாட்டில் எங்கும் காணும் கல்ல வழிபாடாய் இருந்ததெனவும் மாங்குடி கிழார் கூறுகின்ருர். ஒன்னத் தெவ்வர் முன்னின்று விளங்கி ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவி னல்ல்து நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே." என்னும் அவர் அடிகள் இவ்வுண்மையைப் புலப்படுத்தும். எனவே, மிகு பழங்காலம் தொட்டுக் கருங்கல்லாகிய சிலையிலே புகழை நல்ல எழுத்துக்களால் பொறித்து கிலேகாட்டினமை புலகுைம். இந்தக் கல்லில் எழுத்து வடிக்கும் வழக்கம் பிற்காலத்தில் பல்கிப் பெருகியது. தமிழ் நாட்டிலே இடைக்காலத்தில் பலப்பல பெருங் கோயில்கள் எழலாயின. மலேயே காண முடியாத தஞ்சை காட்டிலே வானளாவிய கோபுரங்களையும் மதில்களையும் கொண்ட நூற்றுக் கணக்கான பெருங்கோயில்களே இடைக் காலத்தில் தமிழ் நாட்டைச் சிறக்க ஆண்ட சோழர்கள் கிறுவினர்கள். அவர்களுக்கு முன் வாழ்ந்த பல்லவர்கள் TI. புறம். 335

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/136&oldid=874403" இலிருந்து மீள்விக்கப்பட்டது