பக்கம்:தமிழ் உரை நடை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தமிழ் உரை நடை அத்துறையில் ஓரளவு கருத்திருத்தினர்கள். அவர்கள் குடைந்த குகைக் கோயில்களிலும் பிறவிடங்களிலும் கல்லில் எழுத்துக்களைச் செதுக்கி வைத்துள்ளார்கள். கல்லில் உருவங்களேயும் சித்திரங்களையும் செதுக்கும் கலே காட்டுக்கு மிகப் பழமையானதுதான் என்ருலும், எழுத்துக் களைப் பொறிக்கும் நிலை பல்லவர் காலத்திலே வளர்ந்து, பிற்காலச் சோழர் காலத்திலே சிறந்து, இற்றை வரையிலே ஓரளவு வாழ்கின்றது என்பதை வரலாற்ருளர் நன்கு அறிவர். உருவத்தைக் கல்லில் வடிப்பது கடினமே. ஆயினும், அதனினும் கடினம் எழுத்தைக் கல்லில் செதுக்குவது. தமிழ் எழுத்துக்களின் அமைப்பு நேர்க்கோடுகளால் ஆன தன்று; எத்தனையோ வளைவுகளை உடையது. அந்த வளைவு. களையெல்லம் மிகச் சிறிய அளவிலேயே கருங்கல்லில் உளி' யால் பொறிப்பதென்பது அவ்வளவு எளிதன்று. பொறிக்கும் போது புள்ளியோ, வளைவோ, காலோ நிலை கெடினும் பொருள் மாறுபாடு ஏற்படும். ஆயினும், தமிழ். நாட்டில் அந்தக் கலேயைப் புலவர்கள் நன்கு வளர்த்தார்கள். அதல்ை இடைக்காலத்தில் தமிழும் உரைநடையும் தழைத். தோங்கின என்னலாம். முதன் முதல் பொதுக் கல்வெட்டுக்களைத் தமிழில் வெட்டியவர் பல்லவர்களே. ஆயினும் அவர்கள் முதலில் தமிழில் கல்வெட்டுக்களே வெட்டவில்லை. அவர்கள் வழங்கிய பிராகிருதத்திலும், பின்பு வடமொழியிலும் வெட்டிக் கடைசியாகவே ஏழாம் நூற்ருண்டின் இடைக் காலத்திலேதான் அவர்கள் தமிழில் கல்வெட்டுக்களே வெட்டத் தொடங்கினர்கள். பின் வந்த தஞ்சைச் சோழர் களோ, அவ்வெட்டுக்களே மிகவும் விரிவுபடுத்தித் தமிழ். நாடெங்கனும் கிலே பெறச் செய்தார்கள். அக்கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/137&oldid=874404" இலிருந்து மீள்விக்கப்பட்டது