பக்கம்:தமிழ் உரை நடை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் 129 வெட்டுக்கள் மூன்று கூறுபாடுகளைக் கொண்டவை. முதற் பகுதியில், அக்கல்வெட்டுத் தோன்றிய காலத்து அரசனைப் பற்றிப் பாராட்டப்பட்டிருக்கும். அப்பகுதி பிற்காலச் சோழர் ஆட்சியில் பெரும்பாலும் அகவற்பா அமைப்பி லேயே அமைந்தது. இரண்டாவது பகுதி, இன்னவர் இன்ன அறத்திற்காக நன்கொடை தந்தது என்ற சிறப்புக் குறிக்கப் பெற்றிக்கும். கடைசி பகுதியிலோ, அவ்வறத்தை என்றும் அழியாது பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும், அவ்வாறு காவாவிடின் நேரும் இன்னல் பற்றியும் குறித்தி ருக்கும். பின்னவை இரண்டும், உரை கடைகளாகவே பெரும்பாலும் அமைந்திருக்கும். இந்தப் பெருங் கல் வெட்டுக்களே இடைக்காலத் தமிழ் நாட்டு வரலாற்றை உலகுக்கு நன்கு எடுத்துக் காட்டுகின்றன என்பர் ஆராய்ச்சியாளர். - . இவ்வாறு முதலில் அரசர் பெருமையைக் கூற வருகின்ற பகுதியை இலக்கண நூலோர் மெய்க்கீர்த்தி' என்பர். அரசன் புகழ் மெய்ப்புகழாகப் போற்ற்ப்படு கின்றமையின், அது மெய்க்கீர்த்தியாயிற்றுப் போலும்! முதற்பகுதியில் அவ்வவ்வரசர்கள் செய்கின்ற போர்களேயும், வெற்றிகளையும், வேறு சிறப்புச் செய்திகளையும் காணலாம். அது பற்றி காம் இங்கு ஆராய வேண்டா. அது வரலாற்றுக்குத் தேவையானது. மேலும், அது அகவற்பா வகையில் அமைவது. பின்வரும் உரை நடைப் பகுதிகளே ஈண்டு நாம் நோக்கத்தக்கவை. இப்பகுதிகளிற் சிலவற்றை நாம் காணின், அக்கால உரை நடையை ஒருவாறு உணர்ந்த வராவோம். இக்கல்வெட்டுக்க ளெல்லாம் உரை நடையாலானவை தாம். என்ருலும், எழுத்துக்களைப் பொறிக்கும் போது எத்தனைத் - தொல்லைகள் உண்டாகின்றன! அவ்வாறு பொறிக்கும் போது சில பெயர்களும், சொற்ருெடர்களும், 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/138&oldid=874405" இலிருந்து மீள்விக்கப்பட்டது