பக்கம்:தமிழ் உரை நடை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரை நடையின் தோற்றமும் வளர்ச்சியும் - 5 அவன் எத்துணை மொழி வளம் பெற்றவய்ை இருக்க வேண்டும் ! அந்த மொழி எப்படி வளர்ந்தது? திடீரெனக் கற்பனையும் மொழியும் ஒன்ருகத் தோன்றிவிட்டனவா? ஆம் என்பாரும் உளரோ? பிறந்த குழந்தை மொழி அறிந்தவுடன் பாடத் தொடங்கிவிடுகிறதா? முதல் முதல் சிறு சிறு சொற்களாக" "அப்பா, அம்மா போன்றவைகளாக-அவற்றையும் மெள்ள மெள்ள எழுத்தெழுத்தாகத்தானே பேசத் தொடங்கு கின்றது? அப்படித்தானே மனித வாழ்வின் குழந்தைப் பருவமும் அமைந்திருக்க வேண்டும்? ஆகவே, மெள்ள மெள்ள ஒலி வடிவிலே தான் பெற்ற எழுத்தைத் தனித் தனியாக உச்சரித்துப் பதமாக்கி உரைநடையில் பேசிய பின்பே, பல காலம் கழித்தே அவன் பாடத் தொடங்கி யிருக்க வேண்டும். சிலர், 'குழந்தை முதலில் அழத்தானே செய்கிறது? அந்த அழுகையில் இனிய பாட்டொலி இருக் கிறதே! அதனல், பாட்டுத்தான் முதலில் பிறந்திருக்க வேண்டும் என்பர். இது எவ்வாறு பொருந்தும்? அழுகை ஒலி அழகான முகாரி இராகமாகலாம். அதை யாரும் மறுக்க முடியாது. ஆல்ை, அது எம்மொழியில் உள்ளது? அல்லது அது அழும்போது பாட்டுப் பாடியா அழுகிறது? எனவே, குழந்தை அழுகை ஒலி எழுப்புகிறதே ஒழிய, அது தமிழில் பாடத் தொடங்கிவிடவில்லை யன்ருே? முதலில் தோன்றிய ஒலி பாட்டொலியாகலாமே ஒழிய, அந்த ஒலியே மொழிக்கு முதலாக நிற்கும் எழுத்தொலியாக - பொருள் பொதிந்த ஒலியாக - பாட்டாய் விளங்கிற்று எனக் கொள்ள முடியுமா? அப்படியானல், குழந்தை கற்காமலே பிறந்த வுடன் தன் மொழியில் பாடத் தொடங்குமா? இவை யெல்லாவற்றையும் ஆய்ந்து நோக்கின், குழந்தை வளர்ச்சி யிலாயினும் சரி, மனித இன வளர்ச்சியிலாயினும் சரி, மொழி சிறுகச் சிறுக எழுத்தாகி, எழுத்து சொல்லாகி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/14&oldid=874407" இலிருந்து மீள்விக்கப்பட்டது