பக்கம்:தமிழ் உரை நடை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள். 13t போதாதென்று' என இருப்பதைப் பொருதென்று' என எழுதியிருக்கிருர்கள்." - "சாசனங்களைக் கல்லிலே வெட்டியவர்களும் இத்தகைய பிழைகளைச் செய்திருக்கிருர்கள். அவற்ருேடு இவைகளும் சேர்ந்து கொண்டன. ஒவ்வொரு தடவையும் பிரதி செய்யும் போது இத்தகைய பிழைகள் கூடிக் கொண்டே போய்க் கடைசியில் சாசனப் போக்கே உருத் தெரியாமல் மாறி விடுகிறது. . "சேந்த மங்கலத்திலே காடவராயன் எடுப்பித்த கோயில் வானிலை கண்ட வீர ஈச்வரம்' எனப் பெயர் பெற்றது. அந்தப் பெயரைப் பிரதி செய்தவர்கள் வானில் கண்ட வீர ஈச்வரம்' என்று எழுதக் கடைசியிலே அது, 'வா நீலகண்ட விரேச்வரம்' என மாறி விட்டது. அதே மாதிரி சாசனங் களிலே அதிகமாகப் பயிலப்பட்டு வரும் சொல்லான 'பள்ளித் தாமம் என்பது பள்ளித் தர்மம்', 'பள்ளித் தற்மம்', 'பள்ளித் தறுமம்' என்பன போலப் பற்பல விதமாக எழுதப் பட்டிருப்பதைக் காணலாம். "இக்குறை காணப்படுவது தமிழ்ப் பகுதியிலே தான்; சாசனங்களின் நடு நடுவே சிறந்த எழுத்துக்களில் உள்ள சமஸ்கிருத்ப் பகுதியைப் பிழை இல்லாமல் கிரந்த எழுத்துக் களில் பிரதி செய்திருப்பதைக் காணலாம். ஆனல், சில இடங்களில் அந்தப் பகுதியும் தமிழ் எழுத்தில் எழுதப் பெற்றிருக்கின்றது. அப்போது தமிழ்ப் பகுதியில் குறிப் .பிட்ட பிழைகள் அங்கும் புகுந்து விட்டன,” என்கிருர். இவ்வாறு சாசனப் பகுதியில் உள்ள தமிழ்ப் பகுதி களின் நிலைமாற்றத்தையும் தடுமாற்றத்தையும் காணுங் 1. தென்னந்தியக் கோயில் சாசனங்கள், பாகம். 15. பக். XXI (முன்னுரை) . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/140&oldid=874408" இலிருந்து மீள்விக்கப்பட்டது