பக்கம்:தமிழ் உரை நடை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தமிழ் உரை நடை கால், அவர்கள் இச்சாசனங்களை வெளிக் கொண்டுவர எவ்வளவு பாடுபட்டிருக்கவேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இத்தனை பாடுகளும் பட்டும் சாசனங் களாகிய கல்வெட்டுக்கள் தமிழில் வெளிவரவில்லையானல், இடைக்காலத் தமிழ் காட்டைப்பற்றி ஒன்றும் அறிந்து கொள்ளவே வழி இராதன்ருே! - இனி, இச்சாசனங்களே இவ்வாறு உலகறியச் செய்த வர் யாவர்? தமிழரா? தமிழ் நாட்டு மன்னரா? தமிழ் காட்டு மக்களா? இந்தியரா? இல்லை, என்ருே, யார் யாரோ, எங்கெங்கோ, மூலே முடுக்குகளிலெல்லாம் வெட்டி வைத்த இக் கல்வெட்டுக்களைப் பாரறியச் செய்த பெருமை. ஆங்கிலேயருக்கே உரியது. ஆங்கிலேயர் ஆளும் காலத்தில் நாட்டுக்கலே வளர்வதற்குச் சில நன்மைகளும் செய்திருக் கின்றனர். அவற்றுள் ஒன்று இக் கல்வெட்டு ஆராய்ச்சி. ஆயினும், தோன்றிய காளிலிருந்து இன்று வரை இக் கல் வெட்டுக்களை அழியாமல் காத்து வைத்தவர்கள் மக்களே யாவார்கள். இன்று பழம்பெருங் கோயில்களைப் புதுப் பிக்க வருகின்றவர்கள், கல்வெட்டுக்கள் தாங்கிய பல மதிற்கவர்களே இடித்துத் தரை மட்டமாக்கி, தங்கள் கருத்துப்படி புதுப்புதுச் சுவர்களேக் கட்டலாம். ஆயினும், கடந்த சில ஆண்டுகளாக, இக் கல்வெட்டின் அருமை அறிந்தபின் யாரும் அவ்வளவு எளிமையில் எக்கோயிலேயும் இடிக்க முடியாது. பழம் பொருள் பாதுகாப்புப் பகுதி' (Archaeological Dept.) Malis), DÙ LITFIETĖ.g|Ü போற்றிப் புரக்கின்றது. பண்டைக் காலத்திலும் பிற்காலத்திலும் தமிழ் மன்னரும் இவ்வகையில் இக்கல்வெட்டுக்களைக் காப்பாற் றியே வந்தனர். பண்டைக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கோயில் மேற்பார்வையாளர்கள் இக்கல்வெட்டுக்களுக்கு எண்ணெய் பூசியும், வேறு பழுது நேராமல் பாதுகாத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/141&oldid=874409" இலிருந்து மீள்விக்கப்பட்டது